Home /News /technology /

I Phone டூ Android-க்கு டேட்டா டிரான்ஸ்ஃபர் செய்ய இனி கேபிள் தேவைப்படாது - இந்த ஆப் போதும்!

I Phone டூ Android-க்கு டேட்டா டிரான்ஸ்ஃபர் செய்ய இனி கேபிள் தேவைப்படாது - இந்த ஆப் போதும்!

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

​​How to transfer data from i phone to android | ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு ஆப்பை திறந்தவுடன் நீங்களொரு வெல்கம் ஸ்க்ரீனை பார்ப்பீர்கள். அது ஆப்பின் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கையை ஏற்க சொல்லி கேட்கும்.

9டூ5கூகுள் (9to5Google) வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கு யூசர்கள் தங்கள் டேட்டாவை எளிதாக டிரான்ஸஃபர் செய்ய உதவும் வகையில், கூகுள் நிறுவனம் புதிய 'ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு' என்கிற ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பிட்ட ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு ஆப் ஆனது வயர்லெஸ் முறையில் இயங்குகிறது, அதாவது டேட்டா டிரான்ஸ்ஃபர் செய்ய இரண்டு போன்களை ஒரு கேபிளை கொண்டு இணைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ஆப், ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக அணுக கிடைக்கிறது. ஆப் ஸ்டோரில் உள்ள விளக்கத்தின்படி, "கூகுள் வழங்கும் இந்த ஆண்ட்ராய்டு ஆப் ஆனது உங்கள் மிக முக்கியமான டேட்டாக்களை - அதாவது போட்டோக்கள், வீடியோக்கள், காண்டாக்ட்ஸ் மற்றும் கேலெண்டர் ஈவென்ட்ஸ் போன்றவைகளை - சிக்கலான கேபிள்களின் பயன்பாடு எதுவும் இல்லாமல் ஒரு புத்தம் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் டிரான்ஸ்ஃபர் செய்ய உதவும்".

தற்போது வரை, டிரான்ஸ்ஃபர் செய்யப்படும் டேட்டாக்களின் பட்டியலில் ​மெசேஜ்களை இடம்பெயர வைக்கும் திறன் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஐபோன் யூசர்களுக்கு ஐமெசேஜஸ்-ஐ டிசேபிள் செய்வதற்கான வழிமுறைகள் கிடைக்கும், இதனால் அவர்கள் தத்தம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் டெக்ஸ்ட்களை தவறவிட மாட்டார்கள்.

மேலும் 9டூ5கூகுள் அறிக்கையானது குறிப்பிட்ட ஆப்பை "பட்டியலிடப்பட்டது" என்று கூறுகிறது. அதாவது நீங்கள் இதை ஆப்பிள் ஆப் ஸ்டோர் சேர்ச்சில் உங்களால் கண்டுபிடிக்க முடியாது, ஆனால் அதை டைரக்ட் லிங்கில் இருந்து டவுன்லோட் செய்யலாம். ஆப் ஸ்டார் அல்லது கூகுளின் டெவலப்பர் பேஜிலும் இந்த ஆப் தோன்றவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப் ஸ்டோர் சேர்ச் முடிவுகளில் டைரக்ட் லிங்க்-ஐ கிளிக் செய்யும் போது மட்டுமே இதை கண்டறிய முடியும்.

​​ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு (ஆப்பிற்கான) இணையதளமானது, ஒரு ஐபோன் யூசர் ஆண்ட்ராய்டுக்கு மாறுவதற்கான செயல்முறைகளை பட்டியலிட்டுள்ளது. இந்த செயல்முறையில், யூசர்கள் தங்கள் காண்டாக்ட்ஸ், கேலெண்டர், போட்டோஸ் மற்றும் வீடியோக்களை மற்றொரு டிவைஸிற்கு மாற்றுவதற்கு முன் கூகுள் டிரைவ் ஐஓஎஸ் ஆப் மூலம் பேக்கப் எடுப்பதும் அடக்கம்.

இது ஆப்பிளின் ‘மூவ் டு ஐஓஎஸ்’ ஆப்பை போன்றது, இது ஆண்ட்ராய்டு யூசர்கள் ஐபோன்களுக்கு இடம்பெயர உதவும் ஒரு ஆப் ஆகும், இது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

​​ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்டு ஆப்பை திறந்தவுடன் நீங்களொரு வெல்கம் ஸ்க்ரீனை பார்ப்பீர்கள். அது ஆப்பின் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கையை ஏற்க சொல்லி கேட்கும். அதை சரிபார்த்து விட்டு, ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆக ஆப்பின் ஆண்டராய்டு வெர்ஷனில் இருக்கும் க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.

Also read... உங்க ஸ்மார்ட்போன்ல இத மட்டும் செய்யுங்க... டேட்டாவை பற்றி கவலையே இருக்காது

பின்னர் எந்தெந்த டேட்டாக்கள் ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகவேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதை செய்வதற்கு முன்னதாக உங்கள் ஐபோன் ஆனது ஐஓஎஸ் 12 அல்லது அதற்கு பிந்தைய வெர்ஷன்களில் இயங்குவதை உறுதிசெய்து கொள்ளவும். நாம் மேற்கண்ட வழிமுறைகளானது மேலோட்டமாக வழிமுறைகளே ஆகும். குறிப்பிட்ட ஆப் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே துல்லியமான வழிமுறைகளை நாம் அறிந்துகொள்ள முடியும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Android, IPhone

அடுத்த செய்தி