Home /News /technology /

Google Hangouts விரைவில் நிறுத்தம்.. பழைய ‘சாட்’களை எப்படி சேமித்து வைப்பது.?

Google Hangouts விரைவில் நிறுத்தம்.. பழைய ‘சாட்’களை எப்படி சேமித்து வைப்பது.?

கூகுள் ஹேங்அவுட்ஸ்

கூகுள் ஹேங்அவுட்ஸ்

Google Hangouts | வரும் நவம்பர் 1, 2022 முதல் கூகுள் ஹேங்அவுட்ஸ் செயல்படாது என்றும். அதற்கு பதிலாக, கூகுள் சாட் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் பிரௌசரான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை கடந்த மாதம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது என்று அதிகாரப்பூர்வமான செய்தி வெளியானது. அதேபோல கூகுள் நிறுவனத்தின் சாட் சேவைகளில் ஒன்றான ஹேங்அவுட்ஸ் என்ற சேவையை, இன்னும் சில மாதங்களில் நிறுத்த  போவதாக கூகுள் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 1, 2022 முதல் ஹேங் அவுட்ஸ்  செயல்படாது என்றும். அதற்கு பதிலாக, கூகுள் சாட் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹேங்அவுட்ஸ் என்பது ஒரு chat சேவையாகும். கூகுள் இதுவரை ஹேங்அவுட்ஸ் சேவையை இலவசமாகத் தான் வழங்கி வந்தன. ஜிமெயிலுடன், இந்த chat வசதியையும் பயன்படுத்தி வந்த யூசர்கள், வரும் நவம்பர் முதல் கூகுள் இமெயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் சாட் சேவையை பயன்படுத்தலாம்.

கூகுள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தி ‘சாட்’ செய்து வந்தவர்கள், அதில் உள்ள தரவுகளை, உள்ளடக்கங்களை வரும் ஜனவரி 1, 2023க்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த தேதிக்குப் பிறகு, ஹேங்அவுட்ஸ் டேட்டா அனைத்துமே நீக்கப்பட்டுவிடும். உங்களுக்கு தேவையென்றாலும், தகவல்களை மீட்க முடியாது. ஆனால், இன்னும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது, நவம்பர் 1, 2022 வரை ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தலாம் மற்றும் அனைத்துத் தரவுகளும் இருக்கும், அச்கஸ் செய்யமுடியும் என்பதையும் கூகுள் உறுதி செய்துள்ளது.



ஹேங்அவுட்ஸ் செயல் நிறுத்தம் செய்யும் முன்பு டேட்டாவை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஹேங்அவுட்ஸ்-இல் இருந்து எவ்வாறு உங்கள் டேட்டாவை டவுன்லோடு செய்வது என்பதைப் பார்க்கலாம்.

1. முதலில் Google takeout என்பதற்குச் சென்று, நீங்கள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தும் கூகுள் கணக்கில் லாகின் செய்யவும்
2. நீங்கள் லாகின் செய்தவுடன், அப்ளிகேஷன் பட்டியல் தோன்றும். அதில் Hangouts என்பதைத் தேர்வு செய்யவும். (மற்ற செயலிகளை தேர்வு செய்ய வேண்டாம்)
3. Next Step என்பதை அடுத்ததாகத் தேர்வு செய்யவும்
4. அடுத்ததாக, Delivery Method என்ற விருப்பம் தோன்றும். வாட்ஸ்அப்பில் உங்கள் சாட்கள் பேக்-அப் செய்யப்படுவதைப் போல, ஹேங்அவுட்டிலும் உங்கள் டேட்டா பேக்-அப் ஆகும் (அதாவது டவுன்லோடு செய்து கொள்ளலாம்). எத்தனை நாளைக்கு ஒரு முறை டவுன்லோடு செய்ய வேண்டும் என்ற தேர்வு செய்யலாம். ஆனால், அக்டோபர் மாதம் வரை மட்டுமே ஹேங்அவுட்ஸ் வேலை செய்யும் என்பதால், நீங்கள் one-time download என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
5. அடுத்ததாக, ஃபைல் வகையைத் தேர்வு செய்து, Export என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
6. உங்கள் Hangouts கணக்கிலிருந்து Google அனைத்து டேட்டாவையும் நகல் எடுக்கிறது என்ற செய்தி தோன்றும். இந்த பிராசஸ் முடிந்தவுடன் உங்களுக்கு ஒரு ஃபைலுடன் மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த ஃபைலில் உங்கள் ஹேங்அவுட்ஸ் டேட்டா முழுவதும் இருக்கும்.

Also Read : இனி வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கும் தனியாகக் கட்டணம் - மகிழ்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள்.. ஆனால் யூசர்கள்?

கூகுளில் ஏன் இந்த மாற்றம்?

கூகுள் வொர்க்ஸ்பேஸ் என்று ஒரு சில குறிப்பிட்ட தயாரிப்புகள் உள்ளன. இதில், GIF, கூகுள் ஸ்பேசஸ், உள்ளிட்ட பல விதமான அம்சங்கள் உள்ளன. இந்த நவீன அம்சங்கள் மற்றும் அறிமுகங்களுடன் கூகுள் சாட் தளத்தையும் புதுப்பிப்பது, இவற்றை எளிதாக அணுக உதவும் என்பதால், கூகுள் ஹேங்அவுட்சை நீக்கி, Chat அம்சத்தை அப்கிரேட் செய்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Google, Technology

அடுத்த செய்தி