Home /News /technology /

Google Hangouts சேவைகள் நிறுத்தம் : உங்கள் தரவுகளை டவுன்லோடு செய்வது எப்படி?

Google Hangouts சேவைகள் நிறுத்தம் : உங்கள் தரவுகளை டவுன்லோடு செய்வது எப்படி?

Google,Hangouts,

Google,Hangouts,

இலவசமாக கூகுள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தி வரும் யூசர்கள், வரும் நவம்பர் முதல் கூகுள் இமெயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் சாட் சேவையை பயன்படுத்தலாம்.

    கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் நாம் பயன்படுத்தி வந்த தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பலவும் திடீரென்று அந்தந்த நிறுவனத்தால் நிறுத்தப்படும்.

    உதாரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை கடந்த மாதம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது என்று அதிகாரப்பூர்வமான செய்தி வெளியானது. அதேபோல கூகுள் நிறுவனத்தின் சாட் சேவைகளில் ஒன்றான ஹேங்அவுட்ஸ் என்ற சேவையை, இலவசமாக பயன்படுத்துபவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் நிறுத்தப்பட போவதாக கூகுள் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுள் ஹேங்அவுட்ஸ் என்பது கூகுள் சாட் போன்ற சேவையாகும். இலவசமாக கூகுள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தி வரும் யூசர்கள், வரும் நவம்பர் முதல் கூகுள் இமெயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் சாட் சேவையை பயன்படுத்தலாம்.

    Also Read : உங்கள் ஐபோன் பேட்டரியை பாதுகாக்க இந்த தவறுகளை தவிர்க்கவும்

    கணினி மற்றும் கம்ப்யூட்டரில் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சாட் ஆப்ஷனில் கூகுள் ஹேங்அவுட்ஸ் அல்லது சாட் என்ற இரண்டு விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும். நீங்கள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தினால், மீண்டும் ஜிமெயில் சாட்டுக்கு செல்ல விருப்பமா என்ற ஆப்ஷன் ஒவ்வொரு முறை உங்கள் ஜிமெயில் கணக்கில் லாகின் செய்யும்போதும் கேட்கப்படும். இதேபோல ஆண்ட்ராய்டு மட்டும் ஆப்பிள் சாதனங்களில், ஜிமெயில் செயலியில், ‘Chat’ ஆப்ஷனுக்கு மீண்டும் மாற விருப்பமான என்ற கேள்வி தோன்றும். நீங்கள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தும் யூசராக இருந்தால், Gmail Chat விருப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

    தற்போதைய கூகுள் ஹேங்அவுட்ஸ் முழுவதுமாக நிறுத்தப்பட்டால் அதில் இருக்கும் தரவுகளை இனி பார்க்க முடியாது. எனவே, ஹேங்அவுட்ஸ்-இல் இருந்து எவ்வாறு உங்கள் டேட்டாவை டவுன்லோடு செய்வது என்பதை பார்க்கலாம்.
    முதலில் Google takeout என்பதற்குச் சென்று, நீங்கள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தும் கூகுள் கணக்கில் லாகின் செய்யவும்
    நீங்கள் லாகின் செய்தவுடன், அப்ளிகேஷன் பட்டியல் தோன்றும். அதில் Hangouts என்பதைத் தேர்வு செய்யவும். (மற்ற செயலிகளை தேர்வு செய்ய வேண்டாம்)
    Next Step என்பதை அடுத்ததாகத் தேர்வு செய்யவும்
    அடுத்ததாக, Delivery Method என்ற விருப்பம் தோன்றும். வாட்ஸ்அப்பில் உங்கள் சாட்கள் பேக்-அப் செய்யப்படுவதைப் போல, ஹேங்அவுட்டிலும் உங்கள் டேட்டா பேக்-அப் ஆகும் (அதாவது டவுன்லோடு செய்து கொள்ளலாம்). எத்தனை நாளைக்கு ஒரு முறை டவுன்லோடு செய்ய வேண்டும் என்ற தேர்வு செய்யலாம். ஆனால், அக்டோபர் மாதம் வரை மட்டுமே ஹேங்அவுட்ஸ் வேலை செய்யும் என்பதால், நீங்கள் one-time download என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
    அடுத்ததாக, ஃபைல் வகையைத் தேர்வு செய்து, Export என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
    உங்கள் Hangouts கணக்கிலிருந்து Google அனைத்து டேட்டாவையும் நகல் எடுக்கிறது என்ற செய்தி தோன்றும். இந்த பிராசஸ் முடிந்தவுடன் உங்களுக்கு ஒரு ஃபைலுடன் மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த ஃபைலில் உங்கள் ஹேங்அவுட்ஸ் டேட்டா முழுவதும் இருக்கும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Google

    அடுத்த செய்தி