ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ரூ.936.44 கோடி அபராதம் எதிரொலி... கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.! 

ரூ.936.44 கோடி அபராதம் எதிரொலி... கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.! 

கூகுள்

கூகுள்

Google Play's Billing System | உலக அளவில் மிகப்பெரிய சர்ச் எஞ்சினான கூகுள் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி ப்ளே ஸ்டோர் கொள்ளையில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.936.44 கோடியை அபராதமாக விதித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த வாரம் கூகுள் ப்ளே பில்லிங் விதிமீறலுக்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) கூகுள் நிறுவனத்திற்கு 936.44 கோடி ரூபாயை அபராதமாக விதித்தை அடுத்து, அந்நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

சிசிஐ-யால் ஆப் ஆன கூகுள்:

உலக அளவில் மிகப்பெரிய சர்ச் எஞ்சினான கூகுள் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி ப்ளே ஸ்டோர் கொள்ளையில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.936.44 கோடியை அபராதமாக விதித்தது. அதாவது ஆண்ட்ராய்டு போன் யூஸர்கள் தங்களுக்குத் தேவையான ஆப்களை டவுன்லோடு செய்யும் தளமாக ப்ளே ஸ்டோர் உள்ளது. அதேபோல் ஆப் டெவலப்பர்கள் யூஸர்களுக்கு தங்களது தயாரிப்புகளை கொண்டு சேர்க்கும் இடமாகவும் உள்ளது.

இதனால் தனது வணிக ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்திய கூகுள் நிறுவனமானது, கூகுள் ப்ளே பில்லிங் முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என ஆப் டெவலப்பர்களை கட்டாயப்படுத்தி வந்துள்ளது. கூகுள் நிறுவனம் மீது தொடர்ச்சியான புகார்கள் எழுந்த நிலையில், இந்திய போட்டி ஆணையம் அந்நிறுவனத்திற்கு ஒரே வாரத்தில் இரண்டு முறை மிகப்பெரிய தொகைகளை அபராதமாக செலுத்த உத்தரவிட்டது. இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள கூகுள் நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

கடந்த வாரம் கூகுள் ப்ளே பில்லிங் விதிமீறலுக்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) கூகுள் நிறுவனத்திற்கு 936.44 கோடி ரூபாயை அபராதமாக விதித்தது. இதனால் பேரதிர்ச்சி அடைந்த கூகுள் நிறுவனம் இனி அதன் இன்-ஆப் பில்லிங் முறையை இந்தியாவில் செயல்படுத்துவதை நிறுத்தியுள்ளது.

அபராதம் விதிக்க காரணம்:

இந்திய ஆப் டெவலப்பர்கள் தங்கள் ஆப்ஸை கூகுள் பிளே பில்லிங் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை அந்நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலமாக குறிப்பிட்ட ஆப் செய்யும் ஒவ்வொரு விற்பனைக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கமிஷன் கிடைக்கும் படி செய்யப்பட்டுள்ளது. இதனை மீறிச் செயல்படும் ஆப்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் தடை செய்வதாகவும், இதனால் புதிதாக ஆப் தயாரிக்கும் டெவலப்பர்கள் கடுமையாக பாதிக்கபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதுதொடர்பான புகார்கள் மீது கடந்த வாரம் நடவடிக்கை எடுத்த சிசிஐ, மூன்றாம் தரப்பு பில்லிங் அல்லது கட்டணச் செயலாக்க சேவைகளைப் பயன்படுத்துவதில் இருந்து ஆப் டெவலப்பர்களை தடை செய்யக் கூடாது என்று கூகுளுக்கு உத்தரவிட்டது. வணிகத்தில் அதன் ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது.

Also Read : சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வைத்த செக்... இன்னும் 3 மாசம் தான் கெடு.!

இந்தியாவிற்கு வெளியே உள்ள ஆப் டெவலப்பர்கள் இன்னும் கூகுளின் பில்லிங் முறையைப் பயன்படுத்தி வரும் நிலையில், இனி இந்தியாவில் கூகுள் ப்ளே பில்லிங் முறையை பின்பற்றப்போவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிசிஐ-யின் சமீபத்திய தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள யூஸர்கள் பணப் பரிமாற்றங்களுக்கான டிஜிட்டல் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு கூகுள் ப்ளே-யின் பில்லிங் முறையை டெவலப்பர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அதேசமயம் இந்தியாவிற்கு வெளியே உள்ள யூஸர்கள் ப்ளே ஸ்டோரில் ஆப்களை வாங்க கூகுள் ப்ளே பில்லிங் பயன்படுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : உஷார்..! கூகுளில் இந்த விஷயங்களைத் தேடினால் கண்டிப்பாக சிறைதான்!

கூகுள் ப்ளே பில்லிங் விவகாரத்திற்கு முன்னதாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் கூகுள் தனது ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, இந்திய போட்டி ஆணையம் ரூ.1337.76 கோடி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Google News, Google play Store, Tamil News, Technology