• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Google for india 2021: கூகுள் பே ஹிங்லிஷ், கோவிட்-19 தடுப்பூசி புக்கிங் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் அறிவிப்பு!

Google for india 2021: கூகுள் பே ஹிங்லிஷ், கோவிட்-19 தடுப்பூசி புக்கிங் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் அறிவிப்பு!

கூகுள் ஃபார் இந்தியா 2021

கூகுள் ஃபார் இந்தியா 2021

இதில் பதிவு செய்ய ஆதார் தேவைப்படும் என்ற தெரிகிறது. முதற்கட்டமாக இந்த தடுப்பூசி முன்பதிவு அம்சம் 8 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வேலை செய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

  • Share this:
கூகுள் ஃபார் இந்தியா 2021 (Google for India 2021) இலக்கின் ஒரு பகுதியாக இந்தியா சார்ந்த பல அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. கூகுள் சர்ச், கூகுள் பே, கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட அதன் பல ஆப்களில் இதுவரை இல்லாத அம்சங்களை செயல்படுத்த நிறுவனம் புதிய முன்முயற்சிகளை அறிவித்துள்ளது. உதாரணமாக Google Pay-ல் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்க உதவும் புதிய திறன்களை கூகுள் சேர்த்து உள்ளது.

ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தின் கலவையான 'ஹிங்கிலிஷ்' மொழி விருப்பம் விரைவில் டிஜிட்டல் பேமெண்ட் ஆப்பில் சேர்க்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே போல ஏற்கனவே உள்ள இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆப்ஷன்களுடன் கூடுதல் மொழிகளும் சேர்க்கப்படும் என்றும் கூகுள் கூறி இருக்கிறது.

கூடுதலாக மற்றொரு யூஸரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதற்கு குரல் உள்ளீட்டைப் பயன்படுத்த யூஸர்களை அனுமதிக்கும் வகையில் Google Pay-வில் "speech to text"-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் App-ன் நுண்ணறிவை மேம்படுத்தவும் கூகுள் முடிவு செய்து இருக்கிறது. இதனிடையே Google Pay-ல் புதிய மொழிகளை சேர்க்க உள்ளது பற்றி குறிப்பிட்டுள்ள கூகுள், "மிகவும் உள்ளுணர்வு மற்றும் இயற்கையான" தொடர்புகளை உருவாக்குவதற்கான முயற்சி என்றுள்ளது.

speech to text மூலம் யூஸர்கள் அக்கவுண்ட் நம்பர்களை என்டர் செய்ய, App-ல் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசலாம். எனினும் பணம் செலுத்த தொடங்கும் முன் அனுப்புனருடன் சரிதானா என உறுதி செய்யப்படும். அதே போல கோகுல் அறிவித்துள்ள மற்றொரு முக்கிய அம்சம் பில் ஸ்பிளிட் (Bill Split). பில் ஸ்பிளிட் என்பது வாடிக்கையாளர்கள் ஷேர்டு பில்ஸை (shared bills) பிரித்து செட்டில் செய்ய அனுமதிக்கிறது.சிறு தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களை இலக்காகக் கொண்டு ‘MyShop’ என்றஅம்சத்தை Google Pay பெற உள்ளது.

Google Pay for Business ஆப்ஸைப் பயன்படுத்தும் வணிகர்களுக்கு இந்த டூல்அவர்களின் முன்னோக்கிய பயணத்தை "டிஜிட்டலாக்க" உதவும். கோவிட்-19 தடுப்பூசியை புக் செய்ய கூகுள் அசிஸ்டண்ட்டை பயன்படுத்தும் வகையிலான அப்டேட்டை 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூகுள் கூறி இருக்கிறது. கூகுள் அசிஸ்டண்ட் மூலம் தடுப்பூசி மற்றும் ஸ்லாட்டை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இதில் பதிவு செய்ய ஆதார் தேவைப்படும் என்ற தெரிகிறது. முதற்கட்டமாக இந்த தடுப்பூசி முன்பதிவு அம்சம் 8 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வேலை செய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது. நாட்டில் கோவிட்-19 தடுப்பூசிகளை முன்பதிவு செய்வதை சிக்கலின்றி எளிமையானதாக மாற்றுவதே இதன் குறிக்கோள் என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது.

Also read... நிறைய நேரம் சார்ஜ் இருக்கக் கூடிய பேட்டரி வசதி கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்!

இவை தவிர காலநிலை தொடர்பான பல அம்சங்களையும் கூகுள் அறிமுகப்படுத்தியது. "air quality near me" அல்லது "air quality Delhi" என்று சர்ச் செய்வதன் மூலம் மக்கள் இப்போது தங்கள் அருகிலுள்ள நிலையத்தின் டேட்டா உதவியுடன் காற்றின் தரத்தை சரிபார்க்கலாம். இதற்காக கூகுள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: