ஜி மெயில், கூகுள் பே... கிராஷ் ஆகும் ஆண்டிராய்ட் கூகுள் மொபைல் செயலிகள்.. ஸ்தம்பித்த பயனர்கள்..

கூகுள்

கூகுள் பே, ஜி மெயில் உள்ளிட்ட ஆண்டிராய்ட் கூகுள் மொபைல் செயலிகள் கிராஷ் ஆவதால் பயனர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இப்பிரச்னை இருப்பதை ஏற்றுக்கொண்ட கூகுள் நிறுவனம் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுவருகிறது.

  • Share this:
கூகுள் பே, ஜி மெயில் உள்ளிட்ட ஆண்டிராய்ட் கூகுள் மொபைல் செயலிகள் கிராஷ் ஆவதால் பயனர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இப்பிரச்னை இருப்பதை ஏற்றுக்கொண்ட கூகுள் நிறுவனம் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுவருகிறது.

ஆண்டிராய்ட் தளத்தில் கூகுள் செயலிகளை பயன்படுத்தி வரும் பல பயனர்களும் கூகுள் பே, ஜி மெயில் உள்ளிட்ட செயலிகள் இன்று கிராஷ் ஆகும் பிரச்னையை சந்தித்து வந்தனர். கூகுள் செயலிகள் திடீரென கிராஷ் ஆனதால் மொபைலை ரீஸ்டார்ட் செய்து பார்த்தனர். ரீஸ்டார்ட் செய்தும் பிரச்னை சரி ஆகாததால் இது கூகுள் தரப்பின் தொழில்நுட்ப பிரச்னை என்பதை உணர்ந்து பலரும் இது குறித்து சமூக வலைத்தளத்தில் முறையிட்டனர்.

வெப்சைட் மற்றும் ஆப் கிராஷ்கள் குறித்து கண்காணித்து வரும் Downdetector மற்றும் Reddit போன்ற தொழில்நுட்ப தளங்களில் நூற்றுக்கணக்கான பயனர்கள் தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை தெரிவித்தனர்.

இதனிடையே தங்கள் தரப்பில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப பிரச்னையை ஏற்றுக்கொண்ட கூகுள் நிறுவனம் பிரச்னையை சரி செய்து வருவதாகவும், சரி செய்த உடனே இது தொடர்பாக பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் வழியாக தெரியப்படுத்துவோம் என கூறினர்.

அதே நேரத்தில் மொபைல் செயலிக்கு பதிலாக வெப் தளத்தில் மேற்கண்ட ஆப்களை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

ஆண்டிராய்ட் செயலிகளில் வெப் பேஜ்களை காண வழிவகுக்கும் Android WebView என்ற சேவையின் மூலமாகவே இந்த பிரச்னை எழுந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சாம்சங் நிறுவனம் WebView update-ஐ அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் தங்களின் மொபைலை ஸ்டார்ட் செய்யலாம் என பரிந்துரைத்துள்ளது.

ஜி மெயில், கூகுள் பே போன்ற செயலிகள் திடீரென கிராஷ் ஆனதால் அதனை பயன்படுத்தி வரும் பல்லாயிரக்கணக்கான பயனர்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
Published by:Arun
First published: