ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விரைவில் வருகிறது Google Fit App! இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்

விரைவில் வருகிறது Google Fit App! இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்


Google Fit app

Google Fit app

Google Fit App மூலம் உங்களின் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை நீங்களே அறிந்துகொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டெக் ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு பிறகு மக்களிடையே ஹெல்த்கேர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அவை சார்ந்த தொழில்நுட்பங்களை தேடி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சுவாசம், இதய துடிப்பு மற்றும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு, ரத்தத்தின் நிறம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்வது தொடர்பான பிட்னஸ் கருவிகளை தனித்தனியாக உபயோக்கிக்கின்றனர்.

இதனையறிந்து கொண்ட கூகுள் நிறுவனம், செல்போன்கள் மூலம் சுவாசத்தின் அளவு மற்றும் இதயத்துடிப்புகளை அறிந்துகொள்ளும் வசதியை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கூகுள் பிட் செயலியை (Google Fit App) உருவாக்கியுள்ளது. இந்த செயலி தற்போது பிளேஸ்டோரில் இல்லை. அடுத்த மாதத்துக்குள் அனைத்து ஆன்ட்ராய்டு யூசர்களும் பயன்படுத்துமாறு, அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Google Fit App-ஐ பயன்படுத்தும் முறை

கூகுள் பிட் ஆப் மூலம் இதயத்துடிப்பை தெரிந்துகொள்ள விரும்பினால், கேமரா லென்ஸ் மீது உங்களின் விரலை வைக்க வேண்டும். அப்போது சருமத்தின் நிறம் மாறும். அதன் அடிப்படையில் உங்கள் இதயத் துடிப்பு எவ்வளவு என்பதை கேமரா மூலம் அறிந்து கொள்ளலாம். சுவாசத்தின் அளவை தெரிந்துகொள்ள விரும்பினால், கூகுள் பிட் ஆப் மூலம் கேமராவை ஆன் செய்து, உங்களின் இதயப்பகுதிக்கு நேராக முகம்பார்த்தவாறு பிடிக்க வேண்டும். அப்போது, இயல்பாக எப்போதும்போல் சுவாசியுங்கள். சென்சார் மூலம் உங்களின் சுவாசத்தின் அளவை கண்டறிந்து, அதன் அளவு திரையில் காண்பிக்கப்படும். மேலும், உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரியின் அளவையும் தெரிந்துகொள்ளலாம்

மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தலாமா?

உலகளவில் சுவாசம் மற்றும் இதயப் பிரச்சனைகளை மக்கள் அதிகளவு எதிர்கொள்வதை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம், இந்த செயலியை வடிவமைத்துள்ளது. உடல் இயக்கம் தொடர்பாக பயம் இருப்பவர்கள் உடனடியாக இந்த செயலியை பயன்படுத்தி, தங்களின் சுவாசம் மற்றும் இதயத்துடிப்பை தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். அதேவளையில், இந்த செயலியை நோய் ஒன்றை கண்டுபிடிப்பதற்காக அல்லது மருத்துவ பரிசோதனைகளுக்கு சான்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூகுள் கூறியுள்ளது. மேலும், பிபிஜி மூலம் இதயத்தின் துடிப்பை இந்த செயலி கண்டறியும் எனவும், ரத்தத்தின் நிறம் மாறுவதை ஏறத்தாழ 98 விழுக்காடு சரியாக கண்டுபிடிப்பதாகவும் கூறியுள்ளது.

ALSO READ | உங்கள் துணையிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாத ரகசியங்கள்!

கூகுள் பிட் செயலிக்கான அல்காரிதம்ஸ் மற்றும் அளவீடுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் கூகுள் கூறியுள்ளது. ஏற்கனவே சந்தையில் இருக்கும் பிட்னஸ் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிட்னஸ் பேண்டுகளை வாங்க முடியாதவர்களும், இந்த செயலி மூலம் அந்த பயன்களை அனுபவிக்கலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. பணக்காரர்கள் மட்டுமே ஹெல்த் அப்டேட்ஸை பெறுவதை கவனித்ததாக தெரிவித்துள்ள கூகுள், செல்போன்களை அனைவரும் பயன்படுத்துவதால், அதன்மூலம் ஹெல்த் அப்டேட் வழங்க திட்டமிட்டு இந்த செயலியை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Google, Health Checkup