ரஷ்யாவில் விதிமுறைகளை மீறிய Google - 41 ஆயிரம் டாலர் அபராதம்!

Google

ரஷ்ய அரசாங்கத்துக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையேயான மோதல் போக்கும் மேலும் அதிகரித்தது.

  • Share this:
தனிநபர் தகவல் பாதுகாப்பில் விதிமுறைகளை மீறியதாக கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யாவில் 41 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. ரஷ்ய மக்களின் தகவல்கள் வேறொரு இடத்தில் பாதுகாக்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ரஷ்யா, இது நாட்டு மக்களின் தனி நபர் தகவல் பாதுக்காப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல் என கூறி வருகிறது. மேலும், இதில் தேச பாதுகாப்பும் உள்ளடங்கி இருப்பதால், கூகுள் நிறுவனம் ரஷ்யாவில் ஒரு அலுவலகத்தை தொடங்க வேண்டும் என ரஷ்யா கூறி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஷ்யாவிலேயே அலுவலகத்தை நிறுவி, ரஷ்யாவில் கூகுளை பயன்படுத்துவோரின் தகவல்களை நாட்டின் எல்லைக்குள்ளேயே பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கும் ரஷ்ய அரசாங்கத்துக்கும் இடையே மிகப்பெரிய அளவில் மோதல் போக்கு எழுந்துள்ளது. இதனால், நாட்டில் தடை செய்யப்பட்ட கன்டென்டுகளை நீக்க வேண்டும் என ரஷ்யா கூகுளுக்கு உத்தரவிட்டது. இதனை முறையாக பின்பற்றாத கூகுள் நிறுவனத்துக்கு ஏற்கனவே அந்நாடு கடுமையான அபராதத்தை விதித்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த கூகுள் நிறுவனம், கிரெம்ளின் மாளிகைக்கு ஆதரவான யூடியூப் சேனல்களை பிளாக் செய்தது.

இதனால் ரஷ்ய அரசாங்கத்துக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையேயான மோதல் போக்கும் மேலும் அதிகரித்தது. அண்மையில், தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிகளை மீறியதாக கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டில் வழக்கு ஒன்று நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஸ்கோவில் இருக்கும் டஹன்ஸ்கை (Tagansky) மாவட்ட நீதிமன்றம், கூகுளின் விதிமீறலை உறுதி செய்து தண்டனை அறிவித்துள்ளது. அதன்படி, கூகுள் நிறுவனத்துக்கு 41 ஆயிரத்து 17 அமெரிக்கன் டாலர் அபதராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் விதிக்கப்பட்டுள்ள தண்டனையை கூகுள் நிறுவனமும் உறுதி செய்துள்ளதுடன், அதனைப் பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

Also read... நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் ஃப்ரீயா பாக்கணுமா ? அப்ப இந்த ஜியோ பிளான் ரீசார்ஜ் பண்ணுங்க..

கூகுள் நிறுவனம் உலகளவில் பல்வேறு பிரச்சனைகளை அண்மைக்காலமாக சந்தித்து வருகிறது. அண்மையில் ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் கடுமையான மோதலில் ஈடுபட்டது. தங்கள் நாட்டு விதிமுறைகளுக்கு கூகுள் ஒப்புகொள்ளவில்லை என்றால், தடை செய்யவும் நேரிடும் என எச்சரித்தார். அதாவது, உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் கூகுளில் செய்தியை பகிர்ந்து கொள்வதற்கு குறிப்பிட்ட தொகையை கூகுள் நிறுவனம் கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. இதனை கூகுள் நிறுவனம் ஏற்க மறுத்ததுடன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

அண்மையில், டிவிட்டர் நிறுவனம் இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட விதிகளை ஏற்க டிவிட்டர் மறுத்தது. இதனால், டிவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடுமையான உரசல் ஏற்பட்டு, தற்போது அடங்கியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: