ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கூகுள் நிறுவனத்திற்கு 1337 கோடி ரூபாய் அபராதம்.. காரணம் தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள்!

கூகுள் நிறுவனத்திற்கு 1337 கோடி ரூபாய் அபராதம்.. காரணம் தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள்!

கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம்

கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம்

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் சந்தையைப் பொறுத்தவரை வணிகத்தில் முறைகேடு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழில்நுட்ப சந்தையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ஆட்சி செய்து வருகின்றன. அவர்களுடைய சேவைகளும் தயாரிப்புகளும் மக்களுக்கு இன்றியமையாதவையாக மாறி இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒரு சில நிறுவனங்கள் ஆட்சி செய்கின்றன. அதில் ஒன்றுதான் கூகுள் நிறுவனம். கூகுள் நிறுவனத்தின் சேவைகளும் தயாரிப்புகளும் பயன்படுத்தாத நபர்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு கூகுள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இணைந்துள்ளது.

அதிகாரம் செலுத்துமிடத்தில் முதன்மையான இடத்தில் வகிப்பதை தனக்கு சாதமாக பயன்படுத்தியுள்ளது, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது என்ற ரீதியில் காம்பெடிஷன் கமிஷன் கூகுளுக்கு அபராதம் விதித்துள்ளது. கூகுள் அப்படி என்ன செய்தது என்று இங்கே பார்க்கலாம்.

கடந்த வியாழனன்று காம்ப்பெடிஷன் கமிஷன், தனது அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையை கூகுள் ஆண்ட்ராய்டு தளம் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களில் தவறாக பயன்படுத்தி உள்ளதாக 1337.76 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

Read More : வாட்ஸ் ஆப் முடக்கத்தால் உலகம் முழுவதும் எத்தனை கோடி பேர் பாதிக்கப்பட்டனர் தெரியுமா?

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்நுட்ப சாதனங்களை, சேவைகளை மற்றும் இதர தயாரிப்புகளை வழங்கிவரும் நிறுவனங்கள், முறைகேடான வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல விதமான கெடுபிடிகளையும், விதிமுறைகளையும் அமல்படுத்தி இருக்கிறது. ஆனால், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் சந்தையைப் பொறுத்தவரை வணிகத்தில் முறைகேடு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, கூகுளுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கி அதற்குள் கூகுள் தனது செயல்முறைகளையும் நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, மொபைல் சாதனங்களில் ஆண்ட்ராய்டு தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை ஒரிஜினல் எக்யூப்மெண்ட் மேனுஃபேக்ச்சுரர்களால் நிறுவப்படுகிறது. [Original Equipment Manufacturers (OEMs)]

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியாவின் காம்ப்பெடிஷன் கமிஷன், OEMகள், கூகுள் நிறுவனத்தின் தனியுரிம ஆப்ஸ்களை தனது ஆண்டிராய்டு தளத்தில் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்வதற்கு தடை உத்தரவு விதிக்கக் கூடாது என்ற கூறியது. அதே போல, குறிப்பட்ட ஆப்களை முன்கூட்டியே இன்ஸ்டால் வேண்டும் என்றும் வலியுறுத்தக்கூடாது.

பொதுவாகவே நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைல்களில் கூகிளின் பல்வேறு ஆப்ஸ்களும் சேவைகளும் அதனுடன் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வரும்.

ஆனால் பல்வேறு நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல்களிலுமே, ஒருசில ஆப்ஸ்கள் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டு வரும். இதில் கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு தளத்துடன் இணைந்து இந்த செயலிகளை முன்கூட்டியே இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா என்பதைப் பற்றிய தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து, ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் விருப்பத்தேர்வை கூகுள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருப்பதாக இந்திய கார்ப்பரேஷன் கமிஷன் இந்தியா முடிவு செய்து கூகுளுக்கு 1337 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது. இதைப் பற்றி கூகுள் இதுவரை எந்தவிதமான பதிலையும் கூறவில்லை

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Google, Google Chrome, Technology