2023 ஆம் ஆண்டிலிருந்து, கூகிள் 5 Gbps மற்றும் 8 Gbps வேகத்தில் இணைய சேவைக்கான ஃபைபர் வழங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் அமலியா ஓ'சுல்லிவன் தனது பதிவில் இது குறித்த உறுதியான தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், இந்த கூகுள் ஃபைபர் மூலம் ஒப்பந்தங்கள், தரவு வரம்புகள் அல்லது நிறுவல் செலவுகள் இல்லாமல் வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் அதிவேக இன்டர்நெட் அலைவரிசையைப் பயன்படுத்த முடியும் என Google நம்புகிறது.
கூகுள் ஃபைபரில், எங்கள் வாடிக்கையாளர்கள் இணையம் மூலம் எதைச்சொடுக்கினாலும் உடனே அதற்கு பதில் வரும் வேகத்தை உறுதிசெய்ய விரும்புகிறோம். கேமர்களும் பவர் ஸ்ட்ரீமர்களும் பயன்படுத்த 2 Gbps வேக இணைய சேவை வழங்க இருக்கிறோம். படைப்பாற்றல் வல்லுநர்கள், கிளவுட் அல்லது பெரிய தரவுகளுடன் பணிபுரிபவர்களுக்காக 5 Gbps மற்றும் 8 Gbps அதிவேக இணைய சேவை வசதி வடிவமைக்கப்படவுள்ளது.
5G மொபைல் டேட்டா... எதன் வேகம் அதிகம்? ஏர்டெல்-லா அல்லது ஜியோ-வா.?
பெரிய கோப்புகளை உருவாக்கி பயன்படுத்துபவர்களுக்கு அவற்றை திறமையாக பரிமாற்றும் திறன் தேவை. க்ளவுட் அல்லது நிகழ்நேர வேலை செய்பவர்களுக்கு, நிதிப் பரிவர்த்தனை செய்பவர்கள், தரவுகளை அனுப்புவதற்கு குறைவான பின்னடைவு இருப்பதை உறுதி செய்ய 5 Gbps மற்றும் 8 Gbps இணையசேவை உதவும் என்று அமலியா இடுகையில் கூறினார்.
உட்டா, கன்சாஸ் நகரம், மேற்கு டெஸ் மொயின்ஸ் இல் வசிக்கும் வாடிக்கையாளர்கள் அடுத்த மாத தொடக்கத்தில் இந்த புதிய இணைய சேவை டெஸ்டிங்கை முயற்சிக்கலாம். 2023 இல் பரவலான பல இடங்களில் இந்த சேவை கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 5 Gbps க்கு $125/மாதம் மற்றும் 8Gbpsக்கு $150/மாதம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
'அரிஹந்த்' நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி...
கூகுள் ஃபைபர் 2010ல் 1 Gbps, 2020ல் 2 Gbps, 2022ல் 5 மற்றும் 8 Gbps ஆகியவற்றைக் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 20,000 மெகாபிட்களை களத்தில் சோதித்து வருகிறது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் குறைந்த விலையில் அதிவேக அனுபவத்தை பெற கூகுள் தீவிரமாக முயற்சித்து வருவதாக தெரிவிக்கிறது. மேலும், 5 ஜிபிபிஎஸ் மற்றும் 8 ஜிபிபிஎஸ் திட்டங்களுடன், கூகிள் படைப்பாளிகள், கிளவுட் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் குடும்பங்களை குறிவைத்து வேலை செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.