இனி ஃபேஸ்டைம், வீடியோ கால்களுக்கு டாட்டா! கெத்து காட்டும் Google Duo

அறிமுகமாகி சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரவேற்புப் பெற்று வருகிறது Google Duo.

Web Desk | news18
Updated: December 24, 2018, 10:14 AM IST
இனி ஃபேஸ்டைம், வீடியோ கால்களுக்கு டாட்டா! கெத்து காட்டும் Google Duo
அறிமுகமாகி சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரவேற்புப் பெற்று வருகிறது Google Duo.
Web Desk | news18
Updated: December 24, 2018, 10:14 AM IST
கூகுள் ப்ளே ஸ்டோரில் குறுகிய காலத்தில் அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்ட கூகுள் ஆப் ஆக Google Duo உள்ளது.

ஆப்பிளின் ஃபேஸ்டைம், வாட்ஸ்அப் வீடியோ ஆகியவற்றுக்குப் போட்டியாகக் களம் இறக்கப்பட்ட கூகுளின் Duo கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 500 மில்லியன் முறைகளுக்கு மேல் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ கால் வகையிலான ஆப் தான் Google Duo. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வரையிலும் வெறும் 500 மில்லியன் டவுன்லோடுகள் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீரென வரவேற்புப் பெற்று வரும் Google Duo தற்போது 1 பில்லியன் டவுன்லோடுகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் கடந்து உள்ளது.

2018 முதல் Google Duo, ஐ-பேட், ஆன்ட்ராய்டு டேப்லெட், க்ரோம்புக் ஆகியவற்றிலும் இடம்பெற்றது. Allo என்னும் மெசேஜ் ஆப் உடன் இணைந்து தான் Duo வெளியானது. ஆனால், பெரிதும் கவனிக்கப்படாத Allo தற்போது Duo மூலம் கவனம் பெறுகிறது. ஆனாலும், எதிர்பார்க்கப்பட்ட அளவு வரவேற்புப் பெறாத காரணத்தால் சில நாள்களுக்கு முன்னர் Allo, மார்ச் 2019 உடன் மூடப்படும் என்றும் கூகுள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: அ.ம.மு.க. பிரமுகருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உதவி?
First published: December 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...