நாசா நிலவுப் பயணத்தின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கூகுள்..!

அப்போலோ 11 என்று பெயரிடப்பட்ட அந்தப் பயணத்தை டூடுள் மூலம் கவுரப்படுத்தியுள்ளது கூகுள்.

Web Desk | news18
Updated: July 19, 2019, 9:55 PM IST
நாசா நிலவுப் பயணத்தின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் கூகுள்..!
டூடுள் வீடியோ
Web Desk | news18
Updated: July 19, 2019, 9:55 PM IST
நாசா-வின் ’அப்போலோ 11’ மிஷனின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாசா சார்பில் நிலவுக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்போலோ 11 என்று பெயரிடப்பட்ட அந்தப் பயணத்தை டூடுள் மூலம் கவுரப்படுத்தியுள்ளது கூகுள். இதுவெறும் டூடுள் ஆக மட்டுமல்லாமல் டூடுள் வீடியோவாகவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ டூடுளில் அப்போலோ 11 மிஷனை மேற்கொண்ட பைலட் மைக்கேல் காலின்ஸ் தனது அனுபவம் குறித்தும் அப்பயணம் மூலம் கிடைத்த அறிவு குறித்தும் பகிர்ந்துள்ளார். அந்த டூடுள் வீடியோவில் காலின்ஸ், “அப்போலோ என்னும் பெரும் வெற்றித் திட்டத்துக்குப் பின்னால் சுமார் 4 லட்சம் பேர் அடங்கிய சர்வதேச குழு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் அல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் தவிர்த்து பல தொழிற்சாலைப் பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் என உழைத்தவர்கள் அதிகம் என இந்த வீடியோ தெளிவுபடுத்துகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து நிலவுக்குப் பயணம் மேற்கொண்ட மூன்று அமெரிக்கர்களால் அறிவியல் உலகில் பெரும் மாற்றமே நிகழ்ந்ததைக் கொண்டாடும் விதமாகவே கூகுள் டூடுள் வீடியோவை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவுக்காக விலையைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்..!
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...