WWW வேர்ல்ட் வைட் வெப்-க்கு 30-வது பிறந்தநாள் - கூகுள் சிறப்பு டூடுல்

கணினிகளில் தகவல்களை இணைக்கும் ஹைபர்டெக்ஸ்ட் செர்ன் ஆய்வகத்தில் சிறப்பாக செயல்பட்டது. இதனால், வேலைப்பளு பெரும்பாலும் குறைந்தது. அதன்பின் டிம் பர்னர்ஸ்-லீ தனது இரண்டாவது பெரிய முயற்சியில் இறங்கினார்.

news18
Updated: March 12, 2019, 10:56 AM IST
WWW வேர்ல்ட் வைட் வெப்-க்கு 30-வது பிறந்தநாள் - கூகுள் சிறப்பு டூடுல்
கூகுள் டூடுல்
news18
Updated: March 12, 2019, 10:56 AM IST
ஒட்டுமொத்த உலகத்தை ஒற்றை தளத்தில் இணைத்திருக்கும் WWW வேர்ல்ட் வைட் வெப் இன்றுதான் உருவாகப்பட்டது. இதற்காக கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

இணையத்தின் மிக முக்கியமான அம்சமாக W3 எனப்படும் WWW வேர்ல்ட் வைட் வெப் இருக்கிறது. எளிமையாக கூற வேண்டும் என்றால், இணையம் உடல் என்றால் W3 கண் போன்றது. எப்படி இந்த W3 உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள செர்ன் என்ற அணு ஆராய்ச்சி மையத்தில், அங்குள்ள விஞ்ஞானிகளும் பிற ஐரோப்பிய விஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும் பல திட்டங்களில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால், வேலைகளை விரைவாகவும் எளிதாகவும் ஒருவரோடு மற்றவர் பகிர்ந்து கொள்ள வழியிருக்கவில்லை. அவர்கள் நேரடியாக மற்ற ஆய்வகங்களுக்கு பயணம் செய்வதன் மூலமோ தபால் மற்றும் கூரியர் சேவைகளை பயன்படுத்தியோ? தங்கள் ஆராய்ச்சியின் முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தினர்.

டிம் பர்னர்ஸ்-லீ


செர்ன் ஆய்வகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியான டிம் பர்னர்ஸ்-லீக்கு இது எரிச்சலைக் கொடுத்தது. தகவல்களை வேகமாகவும் சிறப்பாகவும் பகிர்ந்துகொள்ள வழி காண அவர் எடுத்த முயற்சி, ஹைபர்டெக்ஸ்ட் என்ற முடிவில் வந்து நின்றது.

Loading...

கணினிகளில் தகவல்களை இணைக்கும் ஹைபர்டெக்ஸ்ட் செர்ன் ஆய்வகத்தில் சிறப்பாக செயல்பட்டது. இதனால், வேலைப்பளு பெரும்பாலும் குறைந்தது. அதன்பின் டிம் பர்னர்ஸ்-லீ தனது இரண்டாவது பெரிய முயற்சியில் இறங்கினார்.

உலகத்தின் எந்த பகுதியில் இருந்தும் உடனடியாக தகவல்களைப் பெற மற்றும் பகிர்ந்து கொள்ள ஹைபர்டெக்ஸ்ட் என்ற முதல் முயற்சி, W3 - world wide web என பரிமாற்றம் அடைந்தது. 1989-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி இணையத்தில் இந்த W3 இறங்கியது. சில ஆண்டுகளிலேயே இந்த W3 மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இதனை பயன்படுத்துகின்றனர்.

WWW-யின் 30-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
First published: March 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...