ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

குளிர்காலம் தொடங்கியதை வரவேற்க கூகுள் வெளியிட்டிருக்கும் அனிமேட்டட் டூடுல்!

குளிர்காலம் தொடங்கியதை வரவேற்க கூகுள் வெளியிட்டிருக்கும் அனிமேட்டட் டூடுல்!

கூகுள் டூடுல்

கூகுள் டூடுல்

பூமியின் துருவங்களில் ஒன்று சூரியனிடமிருந்து அதன் அதிகபட்ச தூரத்தில் சாய்ந்திருக்கும் போது இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

2021ம் ஆண்டின் குளிர்காலம் தொடங்கிய தினத்தை கூகுள் நிறுவனம் அனிமேஷன் கிராஃபிக் மூலம் டூடுல் வெளியிட்டு கொண்டாடிவருகிறது. அந்த டூடுலில் ஒரு முள்ளம்பன்றி பனியில் நடப்பதைக் காணலாம். மேலும் இன்று கூகுள் வெளியிட்ட அனிமேஷன் கிராஃபிக், கடந்த ஜூன் 21 அன்று கூகுள் டூடுல் நிறுவனம் ட்வீட் செய்ததைப் போலவே இருக்கிறது.

ஆம், கடந்த ஜூன் 21ம் தேதி கூகுள் நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் ஒரு அனிமேட்டட் டூடுலை வெளியிட்டது. அதில், “பூமி அதன் அச்சில் சாய்ந்ததால், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பலர் அடுத்த சில மாதங்களுக்கு குளிர்ச்சியை அனுபவிப்பார்கள்… குளிர்காலத்தின் முதல் நாள் வாழ்த்துக்கள்! #GoogleDoodle.” என்று குறிப்பிட்டிருந்தது.

அந்த வகையில் டிசம்பர் 21ம் தேதியான இன்று குளிர்கால சங்கிராந்தி ஆரம்பமாகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அல்லது 22 ஆம் தேதிகளில் குளிர்காலத்தை சந்திக்கும் பெரும்பாலான நாடுகளில், அதாவது இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இந்த நாள் குறிக்கப்படுகிறது. இந்த காலம் டிசம்பர் சங்கிராந்தி, ஹைமல் சங்கிராந்தி அல்லது ஹைபர்னல் சங்கிராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

பூமியின் துருவங்களில் ஒன்று சூரியனிடமிருந்து அதன் அதிகபட்ச தூரத்தில் சாய்ந்திருக்கும் போது இந்த நிகழ்வு நடைபெறுகிறது. முக்கியமாக இந்த பருவத்தில், பூமி சூரியனில் இருந்து விலகி இருப்பதால், ஆண்டின் மிக நீளமான இரவைக் கொண்டிருக்கும். மிகக் குறுகிய பகல் நேரத்தைக் கொண்டுள்ளது.

குளிர்கால சங்கிராந்தியின் துல்லியமான தருணம் எதுவென்றால் பூமியின் வட துருவம் சூரியனிலிருந்து நேரடியாக விலகி, சூரியன் நேரடியாக மகரத்தின் வெப்ப மண்டலத்திற்கு மேல், சுமார் 23.4 டிகிரி தெற்கில் இருப்பது தான். இது இரவு 09:28 PM IST இல் நடைபெறும். குளிர்கால சங்கிராந்தி பருவத்தில் சூரிய உதயம் காலை 7:10 மணிக்கும், சூரிய அஸ்தமனம் மாலை 5:29 மணிக்கும் இருக்கும் என்று த்ரிக்பஞ்சாங் கூறுகிறது.

குளிர்கால சங்கிராந்தியானது 'சூரியனின் பிறப்பை' குறிப்பதாக பிரபலமாக கூறப்படுகிறது. ஏனெனில் அரைக்கோளத்தில் நட்சத்திரத்திலிருந்து விலகி, நாட்களின் பகல் நீண்டு, இரவுகள் குறையத் தொடங்கும். டிசம்பர் சங்கிராந்தியைப் பொறுத்தவரை, இது சூரியனிலிருந்து விலகியிருக்கும் வடக்கு அரைக்கோளமாகும். அதே நேரத்தில் இது தெற்கு அரைக்கோளத்தில் வானியல் கோடைகாலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

Also read... ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? கூகுள் வெளியிட்டுள்ள 5 வழிகள்!

ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த குரோம்புக் லேப்டாப்களின் பட்டியல்...!

ஜனவரியில் அறிமுகமாகும் புதிய Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்ஃபோன்!

ஆங்கிலத்தில் சங்கிராந்தி என்பது ‘சோல்ஸ்டிஸ்’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சொல் லத்தீன் அறிவியல் சொல்லான ‘சோல்ஸ்டிடியம்’ என்பதிலிருந்து உருவானது. 'சோல்' என்பது சூரியனைக் குறிக்கும் அதே வேளையில், 'சிஸ்டரே' என்பது "நிலைப்படுத்துவது" என்று பொருள்படும். எனவே, சங்கிராந்தியின் தளர்வான மொழிபெயர்ப்பு 'சூரியன் அசையாமல் இருப்பது' என்று பொருள்படும். அதுவே ஈரானில், மக்கள் யால்டா பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அதே சமயம் இது மித்ரா என்ற பண்டைய சூரியக் கடவுளின் பிறப்பைக் குறிக்கிறது.

First published:

Tags: Google, Google Doodle