பயனாளர்களின் தகவல்களைத் திருடிய Beauty Apps- ’செக்’ வைத்த கூகுள்!

போலி ஆப்ஸ்-களைப் பயனாளர்கள் இன்ஸ்டாள் செய்தால் அவற்றை நீக்குவதும் டெலிட் செய்வதும் முடியாத காரியமாகிவிடும், இது தகவல்கள் திருட்டுக்கும் வழிவகுக்கும் என்றும் கூகுள் எச்சரிக்கிறது.

பயனாளர்களின் தகவல்களைத் திருடிய Beauty Apps- ’செக்’ வைத்த கூகுள்!
போலி ஆப்ஸ்
  • News18
  • Last Updated: February 4, 2019, 11:49 AM IST
  • Share this:
பயனாளர்களின் சுய தகவல்களைத் திருடும் 29 ப்யூட்டி ஆப்-களை கூகுள் நீக்கியுள்ளது.

பயனாளர்களின் சுய தகவல்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி செய்தது அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ. இந்த நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் சில ஆண்ட்ராய்டு ஆப்-கள் பல மில்லியன் முறைகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆப்-கள் செல்ஃபி எடுக்கையில் அழகாகத் தெரிவதற்காகப் பயன்படுத்தப்படும் ப்யூட்டி ஆப்ஸ். இந்த ஆப்ஸ் மூலம் ஆபாச இணையதளப் பக்கங்களுக்கு வழிவகுப்பதும் இதன் மூலம் பயனாளர்களின் சுய தகவல்களைத் திருடுவதுமாக இந்த ஆப்ஸ் இருந்துள்ளன. இதனால், இவ்விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 29 ப்யூட்டி ஆப்ஸ் கூகுளால் நீக்கப்பட்டுள்ளன.


தொடர்ந்து போலி ஆப்ஸ்-களைக் களையெடுத்து நீக்கி வருகிறது கூகுள். சமீபமாகக் கூட 15 போலி நேவிகேஷன் ஆப்ஸ் நீக்கப்பட்டன. இந்த ஆப்ஸ் அனைத்தும் சுமார் 50 மில்லியன் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். போலி ஆப்ஸ்-களைப் பயனாளர்கள் இன்ஸ்டாள் செய்தால் அவற்றை நீக்குவதும் டெலிட் செய்வதும் முடியாத காரியமாகிவிடும், இது தகவல்கள் திருட்டுக்கும் வழிவகுக்கும் என்றும் கூகுள் எச்சரிக்கிறது.

மேலும் பார்க்க: மம்தா பானர்ஜிக்கு தலைவர்கள் ஆதரவு!
First published: February 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்