ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சர்ச் என்ஜினாக மாறியுள்ள Google Chrome - பயர்பாக்ஸ் இரண்டாமிடம்...

அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சர்ச் என்ஜினாக மாறியுள்ள Google Chrome - பயர்பாக்ஸ் இரண்டாமிடம்...

அதிகம் பாதிப்புக்குளாகும் சர்ச் என்ஜினாக மாறியுள்ள Google Chrome

அதிகம் பாதிப்புக்குளாகும் சர்ச் என்ஜினாக மாறியுள்ள Google Chrome

மற்ற உலாவிகளுடன் ஒப்பிடும்போது, ​​Apple-ன் Safari உலாவியில் அதன் போட்டியாளர்களை விட குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  புதன்கிழமை வெளியிடப்பட்ட Atlas VPN-ன் கணக்கெடுப்பில் உலகின் மிகவும் பிரபலமான இணைய சர்ச் என்ஜினான Google Chrome, மிகவும் பாதிக்கப்படக்கூடிய/ பாதுகாப்பற்ற இணைய உலாவியாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  VPN புள்ளிவிவரங்கள் VulDB பாதிப்பு தரவுத்தளத்தின் தகவலை அடிப்படையாக கொண்டவை. ஜனவரி 1, 2022 முதல் அக்டோபர் 5, 2022 வரை தரவுத்தளத்தில் பதிவான பாதிப்புகளை அறிக்கை சுருக்கமாக கூறுகிறது. இருப்பினும், பாதிப்புகளின் தீவிரத்தை இந்த ஆய்வு வெளிப்படுத்தவில்லை. மாறாக, அது பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கையில் கவனம் செலுத்தியுள்ளது.

  நார்ட் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியான VPN சேவை வழங்குநர், கிரோமில் இந்த ஆண்டில் மட்டும் 303 பாதுகாப்பற்ற இணைய சேவைகளை பதிவு செய்துள்ளனர். அதேநேரத்தில் தொடங்கப்பட்டதில் இருந்து பிரபலமான இணைய உலாவியில் இதுவரை மொத்தம் 3,159 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

  117 பாதிப்புகளுடன், மொஸில்லாவின் பயர்பாக்ஸ் உலாவி இரண்டாவது இடத்தில் உள்ளது. அக்டோபர் 5 நிலவரப்படி, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் 103 பாதிப்புகளைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது, இது முந்தைய ஆண்டை விட 61% அதிகம். மைக்ரோசாஃப்ட் எட்ஜ் தொடங்கப்பட்டதில் இருந்து, இது மொத்தம் 806 பாதிப்புகளை கொண்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

  பாஸ்வேர்டுகளை திருடும் ஆப்ஸ்கள் – மெட்டா நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

  மற்ற உலாவிகளுடன் ஒப்பிடும்போது, ​​Apple-ன் Safari உலாவியில் அதன் போட்டியாளர்களை விட குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆராய்ச்சியின் படி, இது 2022ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 26 பாதிப்புகளையும், அறிமுகமானதில் இருந்து ஒட்டுமொத்தமாக 1,139 பாதிப்புகளையும் சந்தித்துள்ளது. சஃபாரி இப்போது கூகுள் குரோமிற்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது உலாவியாக உள்ளது.

  குறிப்பிடத்தக்க வகையில், 2022ம் ஆண்டில் இதுவரை 344 பாதிப்புகள் ஓபரா உலாவியில் பதிவாகியுள்ளன.

  சமீபத்தில், கூகுள் குரோம் டெஸ்க்டாப் பிரவுசரில் பதிவாகும் பல பாதிப்புகளுக்கு எதிராக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) உயர் தீவிர மதிப்பீட்டைக் கொண்ட ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ரிமோட் ஹேக்கர்களின் பயனர்கள் கணினியில் அணுகலைப் பெற்று தீங்கிழைக்கும் செயல்பாடுகளைச் செய்வதை நிறுவனம் எச்சரித்துள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Google Chrome, Microsoft Edge, Mozilla Firefox