முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / களத்தில் குதித்த கூகுள்.. 'சாட் ஜிபிடி'க்கு போட்டியாக களம் இறங்கும் கூகுளின் AI 'பார்ட்'.!

களத்தில் குதித்த கூகுள்.. 'சாட் ஜிபிடி'க்கு போட்டியாக களம் இறங்கும் கூகுளின் AI 'பார்ட்'.!

கூகுள்

கூகுள்

Google Bard AI | 'பார்ட்' பல இணையதளங்களில் இருந்து தகவல்களை சேர்த்து பதிலை உருவாக்குவதன்  மூலம் உயர்தர பதில்களை எளிதாக  வழங்க முடியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

Chat GPT என்பது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும்  ஒரு ஆன்லைன் சாட்பாக்ஸ்  (Online Chatbot) மென்பொருள் ஆகும். ஒரு விஷயம்  பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் இணையதளத்தில் தேடாமல் ஒரு சாட்பாக்ஸ் வழியாக தெரிந்து கொள்ள AI மூலம் இயங்கும்  Chat GPT சாட்பாக்ஸ் கடந்த ஆண்டு  நவம்பர் மாதம்  அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் திறனால் செயலிக்கு அடிமையாகிவிட்டதாக  கல்வி செயலி Coursera -ன் CEO, ஜெஃப் மகியோன்கால்டா, அதானி நிறுவனர் கௌதம் அதானி தெரிவித்திருந்தனர். தற்போது இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனது தனது AI சாட்பாக்ஸ் Bard -ஐ அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக AI இல் ஆய்வு செய்து இந்த செயலியை உருவாக்கியுள்ளது. பார்ட் பற்றிய தகவல்களையும், அடிப்படை செயல்பாடுகள் குறித்தும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது பதிவில் எழுதியுள்ளார். அதன்படி பார்ட் (Bard ) என்பது ஒரு AI சோதனை உரையாடல் சேவையாகும். உரையாடல் பயன்பாடுகளுக்கான நிறுவனத்தின் மொழி மாதிரி (LaMDA) மூலம்  இயக்கப்படுகிறது.

மேலும் பார்ட் பல இணையதளங்களில் இருந்து தகவல்களை சேர்த்து பதிலை உருவாக்குவதன்  மூலம் உயர்தர பதில்களை எளிதாக  வழங்க முடியும். நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் கண்டுபிடிப்புகள் போன்ற சிக்கலான தலைப்புகளை 9 வயது குழந்தைக்கு விளக்கவும்,  சிறந்த கால்பந்து வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளைப் பெறவும் இது மக்களுக்கு உதவும் என்று சுந்தர் பிச்சை விளக்கினார் .

முதல் முயற்சியாக கூகுள் நிறுவனம் LaMDA இன் இலகுரக மாடல் பதிப்பில் Bard ஐ வெளியிட உள்ளது. முதலில் சோதனை அடிபடையில் சிலருக்கு இந்த பார்டு கொடுக்கப்படும். அவர்கள் கொடுக்கும் ரிவியூக்களை வைத்து  மேம்படுத்தப்படும். அதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற செயற்கை நுண்ணறிவு செயலியை போல் இல்லாமல் இது குறைவான கணினி சக்தியை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

செல்போனுக்குள் ரோபோ.. தீப்பொறி கிளப்பும் சாட் ஜிபிடி.. ஏழாம் அறிவால் உருவாகும் தாக்கம் என்ன?

கூகுள் நிறுவனம் பார்ட்டை அறிமுகப்படுத்திய அடுத்த தினம் பிரபல மைக்ரோசொப்ட் நிறுவனம் OpenAI இன் ChatGPT ஐ அதன் சொந்த தேடுபொறியான Bing இல் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


First published:

Tags: Artificial Intelligence, Google Bard AI, Sundar pichai