தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உங்களைப் பற்றி எப்படி தெரியும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா? உங்கள் டேட்டா உண்மையில் பாதுகாப்பாக இருக்கிறதா?
லண்டனில் உள்ள டிரைனிட்டி கல்லூரியின் பேராசிரியர் டக்ளஸ் லேய்த் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ஃபோன் மற்றும் மெசேஜ் ஆப்களை பயன்படுத்தி யூஸர்களின் விவரங்களை கூகுள் நிறுவனம் எந்த அளவுக்கு திருடியுள்ளது என்பதை விவரித்துள்ளார்.
ஆமாம், நீங்கள் ஆண்டிராய்டு ஃபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூடிய ஒன்றாகத் தான் இருக்கும். உங்கள் கால் லாக்ஸ் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜஸ் போன்றவற்றை உங்கள் ஒப்புதல் இல்லாமலேயே திருடிக் கொண்டிருக்கிறது கூகுள் நிறுவனம்.
பேராசிரியர் டக்ளஸ் லேய்த் இதுகுறித்து அவரது ஆய்வறிக்கையில், “யூஸர்கள் கூகுள் பிளே சர்வீசஸ் பயன்படுத்த தொடங்கும்போது, அந்த ஆப் அப்டேட்டுக்காக தொடர்புடைய விவரங்கள் சேகரிக்கப்படும் என்ற ஒப்புதலை யூஸர்களிடம் இருந்து பெற்று விடுகிறது. கூகுள் பிரைவேஸி பாலிசியில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கண்டு கொள்ளாமல், அதையும் தாண்டி யூஸர்களின் விவரங்களை கூகுள் நிறுவனம் திரட்டிக் கொண்டிருக்கிறது. திரட்டப்பட்ட தகவல்களை தனது சர்வருக்கு அனுப்பிக் கொள்கிறது’’ என்று கூறியுள்ளார்.
யூஸர்களின் தகவல்களை திரட்டும்போது ஹாஷ் என்ற தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் பயன்படுத்துகிறது. இது ரிவர்ஸ் செய்ய முடியாத ஒன்று என்றாலும் கூட, சின்ன அளவிலான மெசேஜ்களுக்கு ஹாஷ் பயன்படுத்தப்படலாம் அல்லது ஒரு மெசேஜின் பகுதியளவை எடுப்பதற்கு இது பயன்படுத்தப்படலாம் என்று டக்ளஸ் தேய்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து, ‘தி ரெஜிஸ்டர்’ என்ற ஊடக நிறுவனத்திற்கு டக்ளஸ் அளித்த பேட்டியில், “ஹாஷ் என்பது நேர அடிப்படையிலான டைம்ஸ்டாம்ப் உடன் வரும். ஆகவே அதே டைம்ஸ்டாம்ப் மற்றும் ஒரே மாதிரியான மெசேஜ்களை குறி வைத்து அது எடுக்கத் தொடங்கும். சின்ன மெசேஜ்களுக்கு நவீன கம்ப்யூட்டரின் பவரை பயன்படுத்தியிருக்கலாம்’’ என்று தெரிவித்தார்.
Also read... Apple, Google Chrome பயனர்களே உஷார்... மத்திய அரசு வெளியிட்ட திடீர் எச்சரிக்கை!
பொதுவாக ஃபோன் லாக்ஸ் ஆப்-பில் உங்களுக்கு வந்த இன்கம்மிங் கால்கள், நீங்கள் செய்த அவுட்கோயிங் கால்கள் மற்றும் எப்போது பேசப்பட்டது என்ற நேரம் மற்றும் அந்த காலில் நீங்கள் பேசிய நேர அளவு உள்ளிட்டவை குறிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஐடியை, டைம்ஸ்டாம்ப் உடன் பயன்படுத்தி உங்கள் கால் டேட்டா அனைத்தையும் எடுப்பது சாத்தியமே என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம், வாடிக்கையாளர்களுக்கு ஸ்பாம் கால்களில் இருந்து பாதுகாப்பு வழங்கவும், காலர் ஐடி வசதியை வழங்கவுமே கால் லாக் விவரங்களை சேகரிப்பதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத கால்களுக்கு மட்டுமே விவரங்களை சேகரிப்பதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது. ஆனால், யூஸர்கள் இந்த தரவுகளை சேகரிக்க அனுமதி அளிப்பது அல்லது நிராகரிப்பதற்கான வாய்ப்பை கூகுள் நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Google Data Theft