இனி இணைய சேவை இல்லாமலும் கூகுள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்தலாம்!

கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் பாதை கேட்பது, தகவல் அறிவது, சந்தேகங்களைக் கேட்டு அறிவது என அத்தனை சேவைகளையும் இந்த டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டும் பயனாளர்களால் பெற முடியும்.

இனி இணைய சேவை இல்லாமலும் கூகுள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்தலாம்!
கூகுள் அசிஸ்டெண்ட்
  • News18
  • Last Updated: September 20, 2019, 11:50 AM IST
  • Share this:
’இந்தியாவுக்கான கூகுள்’ என்ற நிகழ்வின் மூலம் கூகுளில் பல புதிய அப்டேட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூகுள் அசிஸ்டெண்ட் என்னும் செயற்கை நுண்னறிவு மூலமான சேவையில் இனி இணைய தேவை இருக்காது. இணைய உதவி இல்லாமலே கூகுள் அசிஸ்டெண்ட் சேவையைப் பயனாளர்களால் பயன்படுத்த முடியும். இதற்காக வோடபோன் ஐடியா உடன் கூகுள் இணைந்துள்ளது. இந்தத் தொலை தொடர்பின் மூலம் 000-800-9191-000 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்குத் தொடர்பு கொண்டு இணைய வசதி இல்லாமல் கூகுள் அசிஸ்டெண்ட் சேவைகளைப் பெறலாம்.

டோல் ஃப்ரீ எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்களது கேள்விகளைக் கேட்டால் தொலைபேசி அழைப்பின் மூலமாகவே விடையைப் பெறலாம். இதுகுறித்து கூகுள் தயாரிப்பு மேலாண்மை துணைத்தலைவர் மேனுவல் ப்ரான்ஸ்டீன் கூறுகையில், “சர்வதேச அளவில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக கூகுள் அசிஸ்டெண்ட் பயன்படுத்தும்ம் வரிசையில் இரண்டாம் இடத்தில் ஹிந்தி மொழி உள்ளது.


இதனாலே இந்தியாவுக்கு கூகுள் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தியாவுக்கு ஏற்ற பல அப்டேட்களை இந்தியர்களைக் கவரும் வண்ணம் கூகுள் மேம்படுத்தி வருகிறது” என்றார். கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் பாதை கேட்பது, தகவல் அறிவது, சந்தேகங்களைக் கேட்டு அறிவது என அத்தனை சேவைகளையும் இந்த டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டும் பயனாளர்களால் பெற முடியும்.

இந்தியாவில் மொத்தம் 9 உள்ளூர் மொழிகளில் கூகுள் அசிஸ்டெண்ட் சேவை வழங்கப்படுகிறது. தமிழ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் இந்த சேவை உள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவுக்கான கூகுள்பே: பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற அப்டேட்!யூ டியூப் படையுடன் விஜய்
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்