பிளே ஸ்டோரில் அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்-களும் தடை செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. சொன்னபடியே மே 11ஆம் தேதி புதன்கிழமை முதல் அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்களையும் கூகுள் நிறுவனம் தடை செய்திருக்கிறது. எனினும், உங்கள் ஃபோனில் இன்-பில்ட் வசதியாக ரெக்கார்டிங் ஆப்சன் இருந்தால், அது எந்த தடையுமின்றி செயல்படும்.
கால் ரெக்கார்டிங் சேவைகள் மற்றும் ஆப்களுக்கு எதிரான கருத்தை பல ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் முன்வைத்து வந்தது. யூசர்களின் தனியுரிமையில் தலையிடுவதற்கு இது ஏதுவாக இருக்கிறது என்று அந்த நிறுவனம் கூறி வந்தது. இந்த நிலையில், கூகுள் டயலரில் உள்ள ரெக்கார்டிங் ஆப்ஷன் என்பது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் இயங்கி வந்தது. அதாவது, ஒரு அழைப்பை ஏற்று வாடிக்கையாளர்கள் பேசும்போது, இந்த அழைப்பு ரெக்கார்டிங் செய்யப்படுகிறது என்ற எச்சரிக்கை மெசேஜை இரு பக்கமும் ஒலித்த பிறகே ரெக்கார்டிங் தொடங்கும்.
கூகுள் டயலரில் ரெக்கார்டிங் தொடரும்
தர்ட் பார்ட்டி ரெக்கார்டிங் ஆப்களுக்கு மட்டுமே கூகுள் நிறுவனம் தடை விதித்திருக்கிறது. அதே சமயம், உங்கள் டிவைஸில் கூகுள் டயலர் மூலமாக ரெக்கார்டிங் ஆப்சன் இருந்தால் அது எப்போதும் போல செயல்படுகிறது. மேலும், ரெக்கார்டிங் ஆப்ஷனுடன் கூடிய எந்தவொரு டயலர் ஆப்-பும் தொடர்ந்து அப்படியே செயல்படும். ஆனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ரெக்கார்டிங் ஆப்-கள் மட்டுமே நீக்கப்பட்டிருக்கின்றன.
Also Read : நீங்கள் பழைய மொபைலில் இருந்து புது மொபைலுக்கு மாறும்போது இதை மட்டும் மறக்க வேண்டாம்
முழுமையான தடை ஏன்
முன்னதாக, ரியல் டைம் அடிப்படையில் கால் ரெக்கார்டிங்கை தடை செய்யும் தொழில்நுட்பத்தை ஆண்ட்ராய்டு 6 மற்றும் ஆண்டிராய்டு 10 ஆகிய ஃபோன்களில் கூகுள் செயல்படுத்தி வந்தது. எனினும், சில ஆப்கள் இந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி கால் ரெக்கார்டிங் வசதியை வழங்கி வந்தன. இத்தகைய சூழலில், அனைத்து ஆப்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
கால் ரெக்கார்டிங் வசதியை நீக்கிய ட்ரூ காலர்
அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்களும் தடை செய்யப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே, தங்கள் ஃபிளாட்ஃபார்மில் இருந்து கால் ரெக்கார்டிங் வசதி நீக்கம் செய்யப்படுகிறது என்று ட்ரூ காலர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுவிட்டது.
இதுகுறித்து ட்ரூ காலர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கூகுள் நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட டெவலப்பர் புரோகிரோம் கொள்கைகளின்படி, கால் ரெக்கார்டிங் வசதியை வாடிக்கையாளர்களுக்கு இனி தொடர்ந்து எங்களால் வழங்க முடியாது. அதே சமயம், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டிவைஸ்களில் இந்த வசதி ஏற்கனவே இருக்குமானால், அவர்களுக்கு எந்தவித தடையும் இருக்காது.
முன்னதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக கோரிக்கைகள் வந்ததன் பேரில் அனைத்து ஆண்டிராய்டு யூசர்களுக்கு கால் ரெக்கார்டிங் வசதியை நாங்கள் வழங்கி வந்தோம். அனைத்துப் யூசர்களுக்கும் அந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டது’’ என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Android Apps, Google