ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த 8 ஆபத்தான ஆப் இருந்தால் டெலிட் செய்யவும் - பிளேஸ்டோரிலிருந்தும் நீக்கம்

உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த 8 ஆபத்தான ஆப் இருந்தால் டெலிட் செய்யவும் - பிளேஸ்டோரிலிருந்தும் நீக்கம்

ணத்தை முதலீடு செய்வதன் மூலம் பெரிய லாபம் சம்பாதிக்கலாம் போன்ற வாக்குறுதிகளால் யூசர்களை இந்த ஆப்கள் ஈர்த்து மோசடியில் ஈர்க்கப்பட்டன.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

பிட் ஃபண்ட்ஸ், பிட்காயின் மைனர், பிட்காயின், பிட்காயின் (BTC) உட்பட ஆபத்தான 8 செயலிகளை கூகுள் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. இந்த ஆப்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் நீங்கள் அதை நீக்கம் செய்யவேண்டிய நேரமிது. கடந்த இரண்டு மாதங்களில் கிரிப்டோகரன்சி மைனிங் அனைவரின் ஆர்வத்தையும் ஈர்த்து வருகிறதென்றே சொல்ல வேண்டும். இருப்பினும், ஹேக்கர்கள் இந்த பொது ஆர்வத்தை கிரிப்டோகரன்ஸிகளில் பயன்படுத்தி அப்பாவி நெட்டிசன்களை தங்கள் ஸ்மார்ட்போன்களில் அபாயகரமான மால்வேர் மற்றும் ஆட்வேர் கொண்ட தீங்கிழைக்கும் செயலிகளை இன்ஸ்டால் செய்யவைத்து ஏமாற்றுகின்றனர்.

நல்ல விஷயம் என்னவென்றால், தற்போது இந்த தீங்கிழைக்கும் ஹாக்கிங் ஆப்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அந்த குறிப்பிட்ட ஆப்களை கூகுள் தனது பிளேஸ்டோரிலிருந்து அகற்றியுள்ளது. ஆம், தற்போதுவரை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த ஆப்கள் அனைத்தும் கிரிப்டோகரன்சி மைனிங் செயலிகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளன. கிளவுட் -மைனிங் செயல்பாடுகளில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் பெரிய லாபம் சம்பாதிக்கலாம் போன்ற வாக்குறுதிகளால் யூசர்களை இந்த ஆப்கள் ஈர்த்து மோசடியில் ஈர்க்கப்பட்டன.

Also Read : மோட்டோரோலா எட்ஜ் 2021 ஸ்மார்ட்போன் அறிமுகம்! - ஸ்னாப்டிராகன் 778 ஜி, 108 MP டிரிபிள் கேமரா வசதிகள்

இதுகுறித்து, பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த எட்டு தீங்கிழைக்கும் செயலிகளும், விளம்பரங்களைப் பார்ப்பது, சராசரியாக மாதாந்திர கட்டணம் $ 15 (₹ 1,115) கொண்ட சந்தா சேவைகளுக்கு பணம் செலுத்துவது மற்றும் எதையும் பெறாமல் அதிகரித்த மைனிங் திறன்களுக்கு பணம் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் எண்ணற்ற மக்களை ஏமாற்றி வந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பதிலுக்கு நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளை Google Play-க்கு அறிவித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆப்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. முக்கிய விஷயம் என்னவென்றால், கூகுள் அவற்றை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியிருக்கலாம். ஆனால் இந்த ஆப்களை ஏற்கனவே நீங்கள் உங்கள் தொலைபேசியில் இன்ஸ்டால் செய்திருந்தால், அவை நீங்குவதற்கு வாய்ப்பில்லை. எனவே, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் தொலைபேசியில் விரைவாக அந்த குறிப்பிட்ட ஆப்களை நீக்குவதுதான்.

பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கிய 8 தீங்கிழைக்கும் செயலிகளின் பட்டியல்:

* பிட் ஃபண்ட்ஸ் மைனர் - கிளவுட் மைனிங் (BitFunds- Crypto Cloud Mining)

* பிட்காயின் மைனர்- கிளவுட் மைனிங் ( Bitcoin Miner – Cloud Mining)

* பிட்காயின் (பிடிசி)- பூல் மைனிங் கிளவுட் வாலட் (Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet)

* கிரிப்டோ ஹாலிக்- பிட்காயின் கிளவுட் மைனிங் (Crypto Holic – Bitcoin Cloud Mining)

* டெய்லி பிட்காயின் ரிவார்ட்ஸ் - கிளவுட் பேஸ்டு மைனிங் சிஸ்டம் (Daily Bitcoin Rewards – Cloud Based Mining System)

* பிட்காயின் 2021 (Bitcoin 2021)

* மைன்பிட் ப்ரோ - கிரிப்டோ கிளவுட் மைனிங் & பிடிசி மைனர் (MineBit Pro - Crypto Cloud Mining & btc miner)

*எதிரியம் - பூல் மைனிங் கிளவுட் (Ethereum (ETH) - Pool Mining Cloud)

மேற்கண்ட 8 ஆப்களில் இரண்டினை யூசர்கள் பணம் கொடுத்து ரெஜிஸ்டர் செய்வது போலவும் இருப்பதாக ஆராய்ச்சி தளம் கூறியுள்ளது. அதாவது, கிரிப்டோ ஹோலிக் - பிட்காயின் கிளவுட் மைனிங்கைப் இன்ஸ்டால் செய்ய யூசர்கள் $ 12.99 (தோராயமாக ₹ 966 ) செலுத்த வேண்டியிருந்தது. அதேபோல, டெய்லி பிட்காயின் ரிவார்ட்ஸ் - கிளவுட் பேஸ்டு மைனிங் சிஸ்டம் ஆப்பை இன்ஸ்டால் செய்ய $ 5.99 (தோராயமாக ₹ 445) செலுத்த வேண்டும்.

மேலும், 120-க்கும் மேற்பட்ட போலி கிரிப்டோகரன்சி மைனிங் ஆப்கள் இன்னும் ஆன்லைனில் வலம் வருவதாக ட்ரெண்ட் மைக்ரோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதாவது, "கிரிப்டோகரன்சி மைனிங் திறன்கள் அல்லாத மற்றும் பயன்பாட்டில் உள்ள விளம்பரங்களை வெளியிட்டு பயனர்களை ஏமாற்றும் பல ஆப்கள், ஜூலை 2020 முதல் ஜூலை 2021 வரை உலகளவில் 4,500 க்கும் மேற்பட்ட யூசர்களை ஏமாற்றியுள்ளது" என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Also Read : கூகுளில் இருக்கும் ஈஸியான 3 செட்டிங்ஸ் - தெரியாமல் இருந்தால் தெரிஞ்சுக்கோங்க!

ஒரு போலி கிரிப்டோமைனிங் ஆப்-பை எவ்வாறு அடையாளம் காண்பது?

1. முதலில் அந்த குறிப்பிட்ட ஆப்பின் விமர்சனங்களை கவனமாகப் படிக்க வேண்டும்: போலி ஆப்கள் பொது பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டவுடன் ஏராளமான 5-நட்சத்திர ரிவியூஸ்களை பெறும். ஆனால் நீங்கள் 1-நட்சத்திர ரிவியூஸ்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

2. தவறான கிரிப்டோகரன்சி வாலட் முகவரியை உள்ளிட முயற்சிக்கவும்: ஒரு யூசர் தவறான வாலட் முகவரியை குறியாக்கினால், அந்த ஆப்பும் அதை ஏற்றுக்கொண்டு பின்தொடர்தல் செயல்பாடுகளைச் செய்ய முடிந்தால், காட்டாயம் அந்த குறிப்பிட்ட ஆப் மோசடி செய்வதற்கான அதிக நிகழ்தகவு உள்ளது என்று ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது.

3. செயலாக்கத்தில் இருக்கும்போது ஆப் அல்லது ஃபோனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்: மைனிங் தொடங்கிய பிறகு உங்கள் மொபைல் சாதனத்தை ரீஸ்டார்ட் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது மைனிங் ஆப் பின்னணியில் கொல்லப்பட்டால், கணினி வலுக்கட்டாயமாக கவுண்டரை அழிக்கும், அதை பூஜ்ஜியத்திற்கு மீட்டமைக்கும்.அப்படியானால், அது மோசடி ஆப் என்று அர்த்தம்.

4. திரும்பப் பெறும் கட்டணம் இருந்தால் உறுதிப்படுத்தவும்: கிரிப்டோகரன்சி பரிமாற்றத்திற்கு ஒரு கையாளுதல் கட்டணம் தேவைப்படுகிறது. இது பொதுவாக கிளவுட் மைனிங்கில் இருந்து தயாரிக்கப்படுவதை விட ஒப்பீட்டளவில் அதிகம். எனவே, இலவசமாக பணம் எடுப்பது மிகவும் சந்தேகத்திற்குரியது என்று ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published:

Tags: Google