முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Google அசிஸ்டண்ட்டில் வரவுள்ள புதிய அப்டேட் என்ன தெரியுமா.?

Google அசிஸ்டண்ட்டில் வரவுள்ள புதிய அப்டேட் என்ன தெரியுமா.?

Google Assistant

Google Assistant

Google Assistant | சில தனியுரிமைகளை கருத்தில் கொண்டு, இந்த வசதியை ஆப்ஷனலாக வைத்துள்ளனர். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் செட்டிங்ஸ்'களில் இருந்து நீங்கள் இதை மாற்றி கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கூகுள் அசிஸ்டண்ட் தொழில்நுட்பம் இன்று பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. அதே போன்று இதற்கு ஏற்ற புதிய புதிய அப்டேட்களை கூகுள் நிறுவனமும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு சிறப்பான அப்டேட் ஒன்றை தந்துள்ளனர். இந்தப் புதிய அப்டேட் மூலம் உங்கள் கூகுள் அசிஸ்டண்ட் விரைவில் பெர்ஸ்னலைஸ் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். மார்ச் 2021ல், கூகுள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் 'ஹே கூகுள்' என்கிற வார்த்தையின் துல்லியத்தை மேம்படுத்த, ஒருங்கிணைந்த கற்றலை இந்நிறுவனம் இணைத்தது.

அதன்படி, கூகுள் அசிஸ்டண்ட் தொழில்நுட்பத்தில் பொதுவான மற்றும் அடிக்கடி வரும் வார்த்தைகள், பெயர்களை அங்கீகரிப்பதில் சிறந்து விளங்குவதற்கு புதிய “தனிப்பயனாக்கப்பட்ட பேச்சு அறிதல்” (“Personalized speech recognition”) அம்சத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளனர். ​​இந்த ஸ்மார்ட் அசிஸ்டண்ட் அனுபவத்தை மேம்படுத்த இது ஒரு முக்கியமான படியாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் யூசர்கள் மேம்படுத்தப்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் அனுபவத்தைத் தேர்வு செய்தால், “தனிப்பயனாக்கப்பட்ட பேச்சு அங்கீகாரம்” மூலம் உங்கள் சொந்தக் குரலைச் சேமித்து பகுப்பாய்வு செய்ய முடியும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்க, கூகுள் அசிஸ்டண்ட் செட்டிங்ஸ்'இல் “தனிப்பயனாக்கப்பட்ட பேச்சு அறிதல்” என்கிற ஆப்ஷன் இருக்கும். அதில் "இந்தச் சாதனத்தில் ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேமித்து, நீங்கள் சொல்வதை கூகுள் அசிஸ்டண்ட் சிறப்பாக அறிந்துகொள்ள உதவும்"(“Store audio recordings on this device to help Google Assistant get better at recognizing what you say) என்று இருக்கும். இந்தச் சாதனத்தில் ஆடியோ இருக்கும், மேலும் பெர்ஸ்னலைஸ் செய்யப்பட்ட பேச்சு அறிதல் முறையை முடக்குவதன் மூலம் எந்த நேரத்திலும் இவை நீக்கப்படலாம்.

கூகுள் அசிஸ்டண்ட் எவ்வாறு பயனளிக்கும்?

ஒருவரின் குரலைச் சேமித்து பகுப்பாய்வு செய்வது என்பது நேரத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்க உதவும். ஏனெனில் கூகுள் அசிஸ்டண்ட் தொழில்நுட்பம் பயனரின் குரல் மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களை நன்கு அறிந்திருக்கும். இது பிற யூசர்களின் குரல் மாதிரிகளின் சுருக்கங்களைச் சேகரித்து பகுப்பாய்வையும் செய்கிறது. இந்த அம்சமானது பெரும்பாலும் மேம்பட்ட கட்டளை மற்றும் தொடர்பு பெயர் அறிதலை அனுமதிக்கும்.

Also Read : இன்டர்வியூ அட்டன் செய்வதில் பயமா... கூகுளின் சூப்பர் ஐடியா உங்களுக்கு தான்

நெஸ்ட் ஹப் மற்றும் மினி போன்ற பல 2-வது தலைமுறை சாதனங்கள் ஏற்கனவே மெஷின் லேர்னிங் சிப்பைப் பயன்படுத்துகின்றன. இவை நாம் கேட்கும் கேள்விகளுக்கு மிக விரைவாக பதிலளிக்க வழி செய்கிறது. இப்போது, ​​இந்த சிறப்பம்சமானது ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வரை விரிவடைய உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read : அன்லிமிடெட் இன்டர்நெட், ஓடிடி சந்தாக்கள் இலவசம்... Airtel வழங்கும் சூப்பர் ஆஃபர்

சில தனியுரிமைகளை கருத்தில் கொண்டு, இந்த வசதியை ஆப்ஷனலாக வைத்துள்ளனர். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் செட்டிங்ஸ்'களில் இருந்து நீங்கள் இதை மாற்றி கொள்ளலாம். இருப்பினும் இப்படி செய்வதால், சொற்களை அடையாளம் காண்பதில் துல்லியம் குறைவாக இருக்கும் என்று கூகுள் எச்சரிக்கிறது. இந்த வசதியானது எப்போது வெளியிடப்படும் என்பது குறித்தும், எந்தளவு முன்னேற்றம் இருக்கும் என்பது பற்றியும் இன்னும் சரியாக தெரியவில்லை.

First published:

Tags: Google, Technology