இனி உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கூகுளே படித்துக்காட்டும்...!

இதன் மூலம் முற்றிலும் கைகளைப் பயன்படுத்தாமலே பயனாளரால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் நிலை வரும்.

Web Desk | news18
Updated: August 6, 2019, 12:07 PM IST
இனி உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கூகுளே படித்துக்காட்டும்...!
கூகுள் அசிஸ்டென்ட்
Web Desk | news18
Updated: August 6, 2019, 12:07 PM IST
வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி வரும் காலங்களில் பயனாளர்களுக்கு கூகுள் அசிஸ்டென்ட் படித்துக்காட்டும்.

புதிய தொழில்நுட்ப அப்டேட் கூகுள் மூலம் கூகுள் அசிஸ்டென்ட் சேவையில் இணைக்கப்படும் பணி நடந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த சேவையை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்லாக் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளின் மெசேஜ்களைப் படிக்கவும் உபயோகப்படுத்த முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.

கூகுள் அசிஸ்டென்ட் இனி பயனாளரின் செய்தியை டைப் செய்து அனுப்பும் வசதியுடன் வரும் தகவல்களைப் படித்துக்காட்டும் சேவையாகவும் வர உள்ளது. இதன் மூலம் முற்றிலும் கைகளைப் பயன்படுத்தாமலே பயனாளரால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் நிலை வரும்.

ஆனால், இதில் பல ப்ரைவஸி குறித்த புகார்கள் எழுந்துள்ளதாலே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர தாமதமாகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், பயனாளரின் குரல் ஒலி எப்போதுமே கவனிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அது மிகப்பெரும் தகவல் திருட்டுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையும் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

மேலும் பார்க்க: அமேசான் ப்ரைம் வீடியோ போல இனி ஃப்ளிப்கார்ட் தளத்திலும் வீடியோ ஆப்..!
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...