யூசர்கள் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டிய தேவை குறித்து கூகுள் அசிஸ்டெண்ட் இப்போது நினைவுபடுத்துகிறது. அத்துடன் பாஸ்வேர்டு மாற்றம் செய்வதற்கும் அது உதவிகரமாக இருக்கிறது. ஆண்டிராய்டு டிவைஸ்களில் உள்ள குரோம் பிரவுஸரில், வாடிக்கையாளர்களின் திருடப்பட்ட பாஸ்வேர்டுகளை ஒரு சில டேப்களில் மாற்றிக் கொள்வதற்கான வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது என்று ஆண்டிராய்ட் போலீஸ் என்னும் தொழில்நுட்ப தகவல் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தப் புதிய வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்றும், தற்போது ஏராளமான பயனாளர்களின் டிவைஸ்களில் இந்த வசதி கிடைக்கப் பெறுகிறது என்றும் கூகுள் நிறுவனம் கூறியிருந்தது. யூசர்கள் சேமித்து வைத்திருக்கும் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறுவது குறித்தும், ஏற்கனவே பாதுகாப்பு மீறப்பட்ட டேட்டாக்களில் இருந்து பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகின்றனரா என்பது குறித்தும் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை செய்கிறது.
பாஸ்வேர்டு தானாக மாற்றம் அடையும்
யூசர்கள் பாஸ்வேர்டுகளை மாற்றுவதற்கான ஆட்டோமேடிக் ஹேண்டில் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான யூசர்கள் தற்போது வரையிலும் மேனுவல் முறையிலேயே பாஸ்வேர்டுகளை மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்தப் புதிய வசதி அமலில் இருக்கும்போது, பயனாளர் ஒருவர் தளத்திற்கு உள்ளே லாகின் செய்து நுழையும்போதே, அந்த பாஸ்வேர்டு பாதுகாப்பற்றதாக இருப்பின் அதுகுறித்து கூகுள் நிறுவனம் தகவல் தெரிவிக்கும். வாடிக்கையாளர்களுக்கு ஸ்கிரீனில் காட்டப்படும் டயலாக் பாக்ஸ்-இல் ‘சேஞ்ச் ஆடோமேடிக்கலி’ என்ற பட்டன் ஷேர் செய்யப்படும் என்று ஆண்டிராய்ட் போலீஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
Also Read : ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..
அந்த ஸ்கிரீனில் டேப் செய்தவுடன், கன்பர்மேஷன் ஷீட் ஒன்று திறக்கும். யூசர்கள் அதில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, எந்த இணையதளத்தில் பயனாளர்களின் பாஸ்வேர்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த தளத்திற்கு அவர்கள் ரீடேரக்ட் செய்யப்படுவார்கள். அங்கு அவர்கள் பாஸ்வேர்டை புதுப்பிக்க வேண்டும்.
ஒரு பாஸ்வேர்டை மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை முதல், அதை மாற்றுவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் பயனாளர்களுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் உதவிகரமாக இருக்கும். அதே வேளையில், எந்த ஒரு நிலையிலும் யூசர்கள் விருப்பத்தின் படி இதைச் செய்து கொள்வதற்கான ஆப்சனை தேர்வு செய்ய முடியும்.
Also Read : Google Chrome-ல் பாதுகாப்பு சிக்கல்.! ஹேக் செய்ய வாய்ப்புள்ளது..
கூகுள் அசிஸ்டெண்ட் எப்படி உபயோகிப்பது
நீங்கள் கூகுள் அசிஸ்டெண்ட் மூலமாக பாஸ்வேர்டு நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பினால்
https://passwords.google.com/ என்ற தளத்திற்கு செல்லவும். அங்கு எந்தெந்த தளங்களில் நீங்கள் பாஸ்வேர்டு சேமித்து வைத்துள்ளீர்கள் என்ற பட்டியல் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு தேவையான தளம் ஒன்றை தேர்வு செய்த பிறகு, உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை நீங்கள் எண்டர் செய்து உள்ளே நுழைய வேண்டும். இப்போது நீங்கள் தேர்வு செய்த தளத்தின் பாஸ்வேர்டு அங்கு காண்பிக்கப்படும். அதை நீங்கள் எடிட் செய்து சேவ் செய்யலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.