இனி கூகுள் அசிஸ்டண்ட் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..!

ஹே கூகுள் ’tell me a story’ எனக் கேட்டால் அது உடனே கதை சொல்ல ஆரம்பிக்கும்.

news18
Updated: April 27, 2019, 7:47 PM IST
இனி கூகுள் அசிஸ்டண்ட் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..!
கதை சொல்லும் கூகுள்
news18
Updated: April 27, 2019, 7:47 PM IST
உங்கள் குழந்தையைத் தூங்க வைக்க தினமும் கதை சொல்லி மீள முடியவில்லையா? கவலையே வேண்டாம் இனி அந்த வேலையை கூகுள் அசிஸ்டண்ட் செய்துவிடும்.

ஆம், கூகுளிடம் இனி ஹே கூகுள் ’tell me a story’ எனக் கேட்டால் அது உடனே கதை சொல்ல ஆரம்பிக்கும். உண்மை என்றும் சாகாது, பேராசை பெரும் நஷ்டம் என நீதிக் கதைகளை சொல்லும்.

இந்த கதை சொல்லும் அம்சத்தை இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் வெளியிட்டிருக்கிறது. இப்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த அம்சம் இருக்கிறது.

இதற்கு நீங்கள் லேட்டஸ்ட் வெர்ஷனான கூகுள் பிளே புக் வைத்திருக்க வேண்டும். அது எந்த ஆண்ட்ராய்டு , ஐஃபோனாக இருந்தாலும் சரி. அப்போதுதான் அது நீங்கள் கேட்கும் கதையை சொல்லும் என்கிறார் எரிக் லியு. இவர் கூகுள் அசிஸ்டட்ண்டின் தயாரிப்பு மேலாளராக இருக்கிறார்.

First published: April 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...