ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் நிற்கவில்லையா..?- ’இந்த’ கூகுள் சேவைதான் காரணமாய் இருக்கலாம்!

பேட்டரி நீர்த்துப்போவது மட்டுமல்லாமல் உங்களது மொபைலில் உள்ள தகவல்களும் கசிய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் நிற்கவில்லையா..?- ’இந்த’ கூகுள் சேவைதான் காரணமாய் இருக்கலாம்!
கூகுள் அசிஸ்டென்ட்
  • News18
  • Last Updated: October 17, 2019, 3:35 PM IST
  • Share this:
ஆண்ட்ராய்டு போன்களில் சார்ஜ் போதிய நேரம் நிற்கவில்லை என்றும் பேட்டரி ட்ரெய்ன் ஆகிறது என்றும் பலரும் புலம்பக் காரணம் கூகுளில் உள்ள இந்த ‘பக்’தான்.

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோர் கூகுள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களது மொபைலின் சார்ஜ் குறைந்து கொண்டேதான் வரும். காரணம், சமீபத்தில் ‘பக்’ ஒன்று கூகுள் ஹோம் மற்றும் கூகுள் பிக்சல் சாதனங்களைத் தாக்கியுள்ளது.

இத்தகைய சூழலில் நாம் கூகுள் அசிஸ்டென்ட், வாய்ஸ் காமாண்ட் சேவையைப் பயன்படுத்தினோம் என்றால் சார்ஜ் வேகமாக நீர்த்துப்போகும். இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பயனாளர்களுக்கு இந்த அசெளகரியம் ஏற்பட்டு வருகிறது. பேட்டரி நீர்த்துப்போவது மட்டுமல்லாமல் உங்களது மொபைலில் உள்ள தகவல்களும் கசிய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


கூகுளிடம் இதுகுறித்தப் புகார்கள் சென்றுள்ளது. ஆனாலும், இதுவரையில் இப்பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. கூகுள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்தாமல் இருப்பது தற்காலிகத் தீர்வாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: அசத்தல் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ..!

கம்ப்யூட்டர், மொபைல் - ஹேக்கிங்கைத் தடுப்பது எப்படி
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading