Google | செப்டம்பர் முதல் இந்த ஆண்ட்ராய்ட் வெர்ஷன்களை பயன்படுத்த முடியாது! கூகுள் வெளியிட்ட அறிவிப்பு

சாதனத்தின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் எண், பாதுகாப்பு அப்டேட் லெவல் மற்றும் கூகுள் பிளே சிஸ்டம் லெவலை, செட்டிங்க்ஸில் பார்க்க முடியும்.

சாதனத்தின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் எண், பாதுகாப்பு அப்டேட் லெவல் மற்றும் கூகுள் பிளே சிஸ்டம் லெவலை, செட்டிங்க்ஸில் பார்க்க முடியும்.

  • Share this:
ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகமான காலத்திலிருந்து, பல்வேறு புதிய வெர்ஷன்கள் அப்டேட் செய்யப்பட்டு, பல புதிய அம்சங்களுடன் வருகிறது. ஆண்ட்ராய்ட் ஃபோன் யூசர்கள், கூகுள் கணக்கில் உள்நுழைய முடியும். ஆனால், இப்போது கூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பின் படி, பழைய ஆண்ட்ராய்ட் வெர்ஷன் உள்ள மொபைல் போன் யூசர்கள் இனி கூகுள் கணக்கில் உள்நுழைய முடியாது. அது மட்டுமின்றி, அவர்கள் கூடுதலாக, கூகுள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதிலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடும்.

2010 ஆம் ஆண்டு கூகுள் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்பிரெட் 2.3 வெர்ஷனை வெளியிட்டது. ஆண்ட்ராய்ட் 2.3.7 செப்டம்பர் 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்ஃபோன் யூசர்கள் பாதுகாப்பு அம்சத்துக்காக, சமீபத்திய ஆண்ட்ராய்ட் 11 வெர்ஷனை பயன்படுத்த வேண்டும். வரும் செப்டம்பர் 27, 2021 முதல் ஆண்ட்ராய்ட் 2.3.7 அல்லது அதற்கும் குறைவான வெர்ஷன் உள்ள மொபைல் ஃபோன்களை பயன்படுத்தி, கூகுள் கணக்கில் உள்நுழைய முடியாது. இதன் அப்டேட், யூசர்களின் பாதுகாப்பை கருதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காலத்துக்குப்பின் ஆண்ட்ராய்ட் பழைய வெர்ஷன் பயன்படுத்தி கூகுள் கணக்கில் லாகின் செய்யும் போது, ஜிமெயில், யூடியூப், உள்ளிட்ட கூகுள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 3.0 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷன்கள் உள்ள மொபைல் ஃபோன்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படாது. ஆனாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் யூசர்கள் சமீபத்திய ஆண்ட்ராய்ட் 11 வெர்ஷன் பயன்படுத்த வேண்டும்.

Must Read | குறிப்பிட்ட வாகனங்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்! செப்டம்பர் முதல் அமல்..!

ஆண்ட்ராய்ட் 2.3.7 வெர்ஷன் பயன்படுத்தி கூகுள் கணக்கில் லாகின் செய்தாலும், அதற்கான சப்போர்ட் கூகுள் அளிக்கவில்லை. புதிய மின்னஞ்சல் அல்லது கேலண்டரில் லாகின் செய்யும் போது, யூசர் பெயர் அல்லது கடவுச்சொல்லில் பிழை என்று செய்தி காட்டப்படும்.

கடவுச்சொற்களை மாற்றினாலும், மொபைல் ஃபோனை ஃபேக்டரி ரீசெட் செய்தாலும், இந்த பிழை ஏற்படும். உங்கள் ஆண்ட்ராய்ட் ஃபோனை 2.3.7. க்கு மேற்பட்ட வெர்ஷன் அல்லது அதற்கும் மேலான வெர்ஷனை டவுன்லோட் செய்ய வேண்டும்.

சாதனத்தின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் எண், பாதுகாப்பு அப்டேட் லெவல் மற்றும் கூகுள் பிளே சிஸ்டம் லெவலை, செட்டிங்க்ஸில் பார்க்க முடியும். சாதனத்தின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் எண், பாதுகாப்பு அப்டேட் லெவல் மற்றும் கூகுள் பிளே சிஸ்டம் லெவலை, செட்டிங்க்ஸில் பார்க்க முடியும். சாதனத்தின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் எண், பாதுகாப்பு அப்டேட் லெவல் மற்றும் கூகுள் பிளே சிஸ்டம் லெவலை, செட்டிங்க்ஸில் பார்க்க முடியும். , புதிய ஆண்ட்ராய்ட் 3.0 வெர்ஷன் அல்லது அதற்கும் மேற்பட்ட வெர்ஷனையோ டவுன்லோட் செய்ய முடியவில்லை என்றால், மொபைல் சாதனத்தின் இணைய பிரவுசரில் லாகின் செய்து முயற்சிக்கலாம்.

மொபைல் வெப் பிரவுசர் வழியாக லாகின் செய்தாலும், யூசர்கள் சில கூகுள் சேவைகளை பயன்படுத்த முடியும். வெப் பிரவுசரில் உங்கள் கூகுள் கணக்கு மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்த, Gmail திறந்து, உங்கள் லாகின் விவரங்களை உள்ளிடவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாதனத்தின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் எண், பாதுகாப்பு அப்டேட் லெவல் மற்றும் கூகுள் பிளே சிஸ்டம் லெவலை, செட்டிங்க்ஸில் பார்க்க முடியும். உங்களுடைய மொபைல் என்ன வெர்ஷன் ஆண்ட்ராய்ட் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, மொபைலின் settings app > system > Advanced > System Update > தேர்வு செய்து, ஆண்ட்ராய்ட் வெர்ஷன் மற்றும் செக்யூரிட்டி பாட்ச் லெவல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
Published by:Archana R
First published: