மனிதனை போலவே, இன்னும் சொல்ல போனால் மனிதனை விட திறமையாக இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வருகிறது. கடந்த நவம்பரில் OpenAI நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாக்ஸை அறிமுகம் செய்தது.
அதற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் Bard என்ற செயலியை அறிமுகம் செய்தது. அதே வேளையில் கூகுளின் போட்டி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் ChatGPT யை தனது Bing தேடுதளத்தில் தகவமைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று கூகுள் நிறுவனம், தனது கூகுள் சர்ச், கூகுள் மேப் மற்றும் கூகுள் லென்ஸ் பயன்பாடுகளுக்கான புதிய AI அம்சங்களை அறிவித்தது.
"மனிதர்களின் தேடலும் அதற்கு பதில் தரும் தொழில்நுட்பமும் வளர்ந்துகொண்டே வருகிறது. மனிதனின் தேவையை பூர்த்திசெய்ய தொழில்நுட்பம் தினமும் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படி நாங்கள் எங்கள் பயனர்களுக்கு புதிய தேடல் அனுபவங்களை தற்போது உருவாக்குகிறோம். அவை நம் மனிதர்களின் மனதை போலவே செயல்படுகின்றன. மேலும் மக்களாகிய நாம் எவ்வாறு இயற்கையாகவே உலகைப் புரிந்துகொள்கிறோமோ அதை போலவே இந்த செயற்கை நுண்ணறிவு சர்ச் இன்ஜினும் பிரதிபலிக்கிறது.
இந்த புதிய தேடல் செயல்முறையில் நாம் நுழையும்போது, நமது தேடலுக்கான பதில் எந்த மொழியில் தோன்றியிருந்தாலும், அதன் தகவலை நாம் துல்லியமாக புரிந்து கொள்ள உதவி செய்யும். அப்படியான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று, கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரபாகர் ராகவன் அறிமுக விழாவில் கூறினார்.
ChatGPT -Bard சாட்பாக்ஸ்கள் மோதிக்கொள்ளும் நிலையில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவை தேடுபொறியில் கூகுள் கொண்டுவருகிறது. இந்த AI அம்சங்களுடன் பலதரப்பட்ட இணைய தளத்தில் இருந்து தகவல்களைச் சேகரித்து சுருக்கமாக பெற முடியும். சாதாரண தேடல் போல அல்லாமல் இதன் பதில்கள் மேம்பட்டதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
வெவ்வேறு வடிவங்களில் உள்ள பொருட்களையும் ஒரே நொடியில் தேடலாம். உதாரணமாக, உங்கள் வீட்டில் அழகிய டிஸைன்களோடு செவ்வக வடிவில் ஒரு டேபிளை வைத்திருக்கிறீர்கள். ஆனால் அதே போன்ற டிஸைனுடன் வேறு வடிவத்தில் வாங்க நினைத்தால், அதை கூகுள் லென்ஸைப் பயன்படுத்திப் படம் பிடித்து, பின்னர் வட்ட வடிவம் வேண்டும் என்று உள்ளிட்டு தேடினால் அதே போன்ற வட்ட வடிவ டேபிள்களை காட்டும். இது போன்ற பல அம்சங்களை கூகுள் கொண்டு வருகிறது. கூகுள் அசிஸ்டன்ட் செயல்பாடுகளில் பல புதிய அம்சங்களை சேர்த்து வருகிறது.
கூகுள் தனது ஜெனரேட்டிவ் லாங்குவேஜ் ஏபிஐயை நம்பகமான டெவலப்பர்கள், படைப்பாளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் முதல் திறக்க திட்டமிட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெரும் பீட்பேக்குகள் அடிப்படையில் அதை மேம்படுத்தி பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Google Bard AI, Microsoft