Home /News /technology /

’இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா...’- குழந்தைகளுக்கு டூடுல் போட்டி அறிவித்த கூகுள் நிறுவனம்

’இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா...’- குழந்தைகளுக்கு டூடுல் போட்டி அறிவித்த கூகுள் நிறுவனம்

கூகுள் டூடுல்

கூகுள் டூடுல்

Google Doodle | இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான போட்டியை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவின் 75-வது சுந்திர தின விழா நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாட்டில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி, மாநிலத்தில் வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன்படி, நாடு முழுவதும் திரைப் பிரபலங்கள் உட்பட பலரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றினர்.

    பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பலரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றினர். இந்தநிலையில், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குழந்தைகளுக்கு கூகுள் நிறுவனம் ஒருபோட்டியை அறிவித்துள்ளது. ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்து இந்தியா 75 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இன்னும் 25 ஆண்டுகளில் 100 ஆண்டுகளை அடையும். இந்த 75 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருந்தாலும், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

    எனவே, இன்னும் ‘25 ஆண்டுகள் கழித்து இந்தியா இப்படி இருக்கும்...’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு கூகுள் நிறுவனம் போட்டி அறிவித்துள்ளது. இந்த கருத்தின் கீழ் கூகுள் நிறுவனத்துக்கு டூடுள் வரையும் போட்டியை அறிவித்துளது. கூகுள் டூடுள் அறிவித்துள்ள போட்டிக்கு கடைசி நாளாக செப்டம்பர் 30-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள், பாதுகாப்பாளர்கள் குழந்தைகளுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.



    ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பெயர், வகுப்பு, பள்ளி பெயர், ஊர் பெயர் முதலிய விவரங்களையும் பூர்த்தி செய்யவேண்டும். வரையப்பட்ட டூடுளை நேரடியாக ஆன்லைன் மூலம் அப்லோட் செய்யலாம். அல்லது அஞ்சல், மெயில் மூலமாகவும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகளையும் சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Archana R
    First published:

    Tags: Google, Independence day

    அடுத்த செய்தி