Home /News /technology /

எல்லோரும் பயன்படுத்த கூடிய chatbot - கூகுள் CEO சுந்தர் பிச்சை கூறிய நல்ல செய்தி..

எல்லோரும் பயன்படுத்த கூடிய chatbot - கூகுள் CEO சுந்தர் பிச்சை கூறிய நல்ல செய்தி..

கூகுள் சாட்பாட்

கூகுள் சாட்பாட்

Google AI Chatbot | கூகுள் நிறுவனம் அதன் LaMDA (உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி) மாதிரியின் ஆரம்ப முன்னோட்டங்கள் குறித்த சில விஷயங்களை கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு வகையான செயலிகளையும், புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இவை அனைத்தும் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை தர கூடிய வண்ணம் அமைந்து வருகிறது. இந்நிலையில் கூகுள் தனது சோதனை செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்த கூடிய வகையில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் மொழி மாதிரியில் பயிற்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு இயக்க கூடிய பாட்களையும் பயன்படுத்தலாம்.

கூகுள் நிறுவனம் அதன் LaMDA (உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி) மாதிரியின் ஆரம்ப முன்னோட்டங்கள் குறித்த சில விஷயங்களை கூறியுள்ளது. அதில், "தவறான அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கத்தை இது காட்டக்கூடும்" என்றும் எச்சரித்துள்ளது. மேலும் கூகுள் வழங்கும் ‘AI டெஸ்ட் கிச்சன்’ என்பது கூகுளின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளவும், உணரவும் மற்றும் கருத்துக்களை வழங்கவும் இது ஒரு சிறந்த பயன்பாடாக இருக்கும்.

அதே போன்று "கூகுளின் குறிக்கோள் என்பது, செயற்கை நுண்ணறிவில் பொறுப்புடன் கற்றுக்கொள்வது, மேம்படுத்துவது மற்றும் புதுமைப்படுத்துவது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் படிப்படியாக சிறிய குழுக்களுக்கு இந்த அம்சத்தை திறக்க உள்ளதாகவும்" கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்து, ஆல்பாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியதாவது, 'AI டெஸ்ட் கிச்சன்' என்பது "உங்கள் கைகளில் லாம்டா அம்சத்தை வைத்திருப்பது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய உணர்வைத் தருவதாகும்". மேலும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை இந்த மொழி மாதிரிகள் உருவாக்கும் திறனை கொண்டுள்ளது " என்றும் அவர் குறிப்பிட்டார்.



"லாம்டாவின் சமீபத்திய பதிப்பில் பாதுகாப்பு மற்றும் துல்லியத்தில் கணிசமான மேம்பாடுகளை தாங்கள் செய்திருப்பதாகவும், இன்னும் அதன் தொடக்கத்தில் தான் தாங்கள் இருக்கிறோம்" என்றும் கூகுள் நிறுவனம் கூறியது. மேலும் இந்த ஏஐ டெஸ்ட் கிச்சனில் பல அடுக்கு பாதுகாப்புகளைச் சேர்த்துள்ளதாகவும் சுந்தர் பிச்சை கூறினார். அதே போன்று கூகுள் மற்றும் மெட்டா இரண்டும் தங்கள் AI உரையாடல் சாட்பாட்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read : அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

மேலும் எல்லா உரையாடல் AI சாட்பாட்களும் சில சமயங்களில் பாதுகாப்பற்ற, பக்க சார்பான அல்லது புண்படுத்தும் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகவும் உருவாக்குவதாகவும் கடந்த வாரம் மெட்டா நிறுவனம் கூறியிருந்தது. அதனால்தான் எதிர்கால சாட்பாட்களை மேம்படுத்த உதவும் கருத்துக்களை தாங்கள் சேகரித்து வருவதாக இந்நிறுவனம் கூறியிருந்தது. இது போன்ற சாட்பாட்கள் மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தந்தாலும், பல வகைகளில் பாதிப்பை தர கூடியவையாக இருக்க வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த காலங்களில் இப்படிப்பட்ட சாட்பாட்கள் பெரிய அளவில் வளர்ந்து வந்தாலும், அவை பாதுகாப்பானவையாக இருக்க கூடுமா என்பதே மக்கள் மத்தியில் நிலவி வரும் சந்தேகமாக உள்ளது.

Also Read : சீன மொபைல்கள் இந்தியாவில் தடையா.? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசாங்கம்.!

இவற்றின் சாதக பாதகங்களை வரும் காலங்களில் நம்மால் உணர முடியும் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துக்களாக உள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Google, Technology

அடுத்த செய்தி