• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கூகுள் கணக்கில் லாகின் செய்வதில் மாற்றங்கள் - 2 step verification பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

கூகுள் கணக்கில் லாகின் செய்வதில் மாற்றங்கள் - 2 step verification பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

கூகுள் கணக்கில் லாகின் செய்வதில் மாற்றங்கள்

கூகுள் கணக்கில் லாகின் செய்வதில் மாற்றங்கள்

Google account update : பாதுகாப்பு நடிவடிக்கையின் அங்கமாக 2SV (Step Verification) இனி கட்டாயப்படுத்தப்படும் என்பதை கடந்த மாதம் வெளியிட்ட ஒரு பதிவில் கூகுள் தெரிவித்திருந்தது.

  • Share this:
தொழில்நுட்பம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடையும் நேரத்தில், இணையத்தில் பாதுகாப்பாக இயங்குவதன் தேவையும் அதிகமாகி உள்ளது. ஒரு கிளிக் செய்தல் போதும், எந்த கணக்கில் வேண்டுமானாலும் லாகின் செய்யலாம் அல்லது ஷாப்பிங் செய்யலாம் என்பதெல்லாம் ஒரு காலத்தில் மிகப்பெரிய விஷயமாகவும், சுலபமாகவும் காணப்பட்டது. ஆனால், கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய அப்டேட்டின் படி, இனி கூகுள் கணக்குகளில் ஒன்-கிளிக் லாகின் பயன்படுத்தி கணக்கை அணுக முடியாது. கூகுள் கணக்கு லாகின் பற்றிய பல்வேறு புதுப்பிப்புகளை நிறுவனம் அறிவித்து, அமல்படுத்தி வரும் நிலையில், இது மிகப்பெரிய அறிவிப்பாக வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு முறை புதிதாக லாகின் செய்யும்போதும், பாஸ்வேர்டு உள்ளிட்டு, உங்கள் மொபைல் வழியாக லாகின் செய்வதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதனால் உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கும். ஏற்கனவே இந்த 2SV அம்சம் கூகுளில் இருந்தாலும், அனைவருமே கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கூறப்படவில்லை. வரும் நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து இனி 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செய்தால் மட்டுமே கூகுள் கணக்கில் லாகின் செய்ய முடியும் என்பதை கூகுள் அப்டேட் செய்துள்ளது. உங்கள் கூகுள் கணக்கின் கூடுதல் பாதுகாப்புக்காகத் தான் இந்த மாற்றத்தை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு நடிவடிக்கையின் அங்கமாக 2SV (Step Verification) இனி கட்டாயப்படுத்தப்படும் என்பதை கடந்த மாதம் வெளியிட்ட ஒரு பதிவில் கூகுள் தெரிவித்திருந்தது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் 150 மில்லியனுக்கும் அதிகமான கூகுள் கணக்குகளுக்கும் இந்த 2SV பொருந்தும் என்றும் தெரிவித்தது. அது மட்டுமின்றி, கிட்டத்தட்ட 2 மில்லியன் யூடியூட் கிரியேட்டர்களும் இனி 2SV பயன்படுத்தித் தான் லாகின் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.

ALSO READ |  ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் - எப்படி தெரியுமா?

‘பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் முன்னோடியாக இருந்து வரும் கூகுள் நிறுவனம், முறையான அங்கீகாரம் இல்லாமல் கூகுள் கணக்கை பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக 2SV யை அறிமுகப்படுத்தியிள்ளது.” என்று கூகுளின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2SV என்றால் என்ன?

2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்பது உங்கள் தரவுகளுக்கான கூடுதல் பாதுகாப்பு வழங்கும் லாகின் அம்சமாகும். நான் மிகவும் தனித்துவமான பாஸ்வேர்டு பயன்படுத்துகிறேன், என்னுடைய பாஸ்வேர்டை யாரும் கண்டுபிடித்து என்னுடைய கணக்கை அக்சஸ் செய்ய முடியாது என்பதை நீங்கள் நினைத்தால், அது தவறு. ஒன்றுக்கும் மேற்பட்ட லாகின் தளத்தில் நீங்கள் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தினால், எளிதாக உங்கள் பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிவதற்கு வாய்ப்புள்ளது.

ALSO READ |  மலிவு விலையில் அறிமுகமான Nokia X100 5G ஸ்மார்ட் ஃபோன் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

இணையத்தின் உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருக்க, உங்கள் கணக்கில் லாகின் செய்யும் முறையை பலப்படுத்தி உள்ளது கூகுள். பாஸ்வேர்டு இருந்தால் மட்டும் இனி லாகின் செய்ய முடியாது. கூடுதலாக, மொபைல் மூலமாக வெரிபிகேஷன் செய்து, நீங்கள் தான் லாகின் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உறுதிபடுத்த வேண்டும். அதாவது, எப்போதெல்லாம் லாகின் செய்கிறீர்களோ, பாஸ்வேர்டு உள்ளிட்ட பிறகு, உங்கள் மொபைலுக்கு அனுப்படும் வெரிஃபிகேஷன் எண்ணை உறுதி படுத்தினால் தான் லாகின் செய்ய முடியும்.

எனவே, ஹேக்கர்கள் உங்கள் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டாலும், பாஸ்வேர்டை மட்டும் உள்ளிட்டு லாகின் செய்ய முடியாது.

ALSO READ |  விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் X ஸ்மார்ட்போன் - விலை, சிறப்பம்சங்கள்!

இந்த கூகுள் அப்டேட்டை பயன்படுத்துவது எப்படி?

* 2SV தானாகவே அனைத்து கூகுள் கணக்குகளுக்கும் அப்டேட் ஆகிவிடும்.
* நீங்கள் முதலில் உங்கள் கூகுள் கணக்கில் உங்கள் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டும்.
* பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்
* உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP மெசேஜ், வாய்ஸ் கால் அல்லது உங்கள் கூகிள் மொபைல் ஆப் வழியாக அனுப்பப்படலாம்.
* உங்களுக்கு OTP கிடைத்தவுடன், நீங்கள் லாகின் பாரில் அதை உள்ளிட்டு, லாகின் செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: