ஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்

ஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்
(படம்: WinFuture)
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 11:02 PM IST
  • Share this:
பிக்சல் 5 கூகுள் தயாரிப்புகளுக்கு என்று ஒரு தனி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு இணையாக கூகுள் வாடிக்கையாளர்கள் உலகெங்கும் உண்டு. அவர்கள் கூகுள் வெளியிடும் தயாரிப்பு சார்ந்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அந்த வகையில், கூகுளின் செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்வுக்கு முன்னர் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4 ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் பற்றிய செய்தி கசிந்துள்ளது. இப்போது, கூகுளின் புதிய 'ஸ்லிப்-அப்' அந்த உற்சாகத்தை மேலும் தூண்டிவிட்டதாகத் தெரிகிறது.

ஏனெனில் கூகுள் நிறுவனம் ஜப்பானுக்கான தன் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தற்செயலாக பிக்சல் 5 குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த ட்வீட்டில் பிக்சல் 5-க்கான வீடியோ டீஸர் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் டிசைன், அதன் 5ஜி வசதி, விலை போன்றவை பற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Also read: ஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு


தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பிக்சல் 5 ஜப்பானில் JPY ரூ.74,800 (நேரடி விற்பனையில் ரூ. 52,260) ஆக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனை ஒப்பிடுகையில் பிக்சல் 4, கடந்த ஆண்டு ஜப்பானில் JPY 89,980 (நேரடி விற்பனையில் ரூ. 62,860) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 9to5Google அறிக்கையின்படி, "கூகுளின் அல்டிமேட் 5 ஜி- எனேபிள்டு ஸ்மார்ட்போன் கூகிள் பிக்சல் 5 இப்போது முன்கூட்டியே ஆர்டருக்குக் கிடைக்கிறது. வேகமான திரைப்பட பதிவிறக்கங்கள் மற்றும் தரமான புகைப்படங்களை எடுக்கவும் இது சிறந்ததாக இருக்கும். சிறந்த ஸ்பெக்ஸ் 5 ஜி எக்ஸ்பீரியன்ஸ்” என்று கூகிள் டீஸரை மேற்கோள் காட்டி ஒரு வலைத்தளம் கூறியுள்ளது.

மேலும் கூகுள் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனான பிக்சல் 4 ஏ 5 ஜி, புதிய கூகுள் நெஸ்ட் ஸ்பீக்கர் மற்றும் புதிய குரோம் காஸ்ட் சாதனம் ஆகியவற்றுடன் செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன் மக்களால் மிகவும் விரும்பப்படும் ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4 ஏ 5 ஜி ஆகியவற்றை இந்தியாவில் விற்பனை செய்யவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading