எதுக்குங்க கல்யாணம் பண்ணச் சொல்லியே கேட்குறீங்க? கொதித்தெழுந்த கூகுள்

கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் இருக்கும் கடுப்பில் இப்படி கேட்கிறார்களா? அல்லது விளையாட்டாக கேட்கிறார்களா? என்பது தெரியாமல் கூகுள் தற்போது மேற்கண்ட கேள்விக்கு பதில் கேள்வியை எழுப்பியுள்ளது.

எதுக்குங்க கல்யாணம் பண்ணச் சொல்லியே கேட்குறீங்க? கொதித்தெழுந்த கூகுள்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: January 29, 2019, 9:03 AM IST
  • Share this:
ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் அஸிஸ்டண்ட் அம்சத்தில் அதிகமானோர் எழுப்பிய ஒரே கேள்விக்கு, கூகுள் நிறுவனம் பதில் கேள்வி கொடுத்துள்ளது.

கூகுள் அஸிஸ்டண்ட் என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். மனிதர்களின் குரலை கண்டறிந்து அவர்களின் கட்டளைக்கேற்ப இந்த அமைப்பு தகவல்களை தேடித்திரட்டி அளிக்கிறது. ஸ்மார்ட் போன்களில் இந்த கூகுள் அஸிஸ்டண்ட் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கையில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் பலர் கூகுள் அஸிஸ்டண்டை ஓபன் செய்து தாறுமாறாக கேள்விகளை கேட்கின்றனர். இதில், பலரும் கேட்பது ஒரே கேள்விதான். ”கூகுள் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?” என்பதே அந்தக் கேள்வி.


கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் இருக்கும் கடுப்பில் இப்படி கேட்கிறார்களா? அல்லது விளையாட்டாக கேட்கிறார்களா? என்பது தெரியாமல் கூகுள் தற்போது மேற்கண்ட கேள்விக்கு பதில் கேள்வியை எழுப்பியுள்ளது.“எங்களுக்கு உண்மையாக... உண்மையாக... உண்மையாக................ தெரியவேண்டும் ஏன் கூகுள் அஸிஸ்டெண்டிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ள கேட்கிறீர்கள்?” என்று கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை ட்விட் செய்துள்ளது.

கூகுளின் இந்த ட்வீட்டிற்கு பலரும் கிண்டலான பதிலை தெரிவித்து வருகின்றனர்.Also See...

First published: January 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்