Home /News /technology /

ஜிமெயில் டிப்ஸ்: கம்பியூட்டர், ஸ்மார்ட்போன் வழியாக ரகசியமாக இமெயில் அனுப்புவது எப்படி?

ஜிமெயில் டிப்ஸ்: கம்பியூட்டர், ஸ்மார்ட்போன் வழியாக ரகசியமாக இமெயில் அனுப்புவது எப்படி?

ஜிமெயில்

ஜிமெயில்

ஜிமெயில் வழியாக ரகசியமாக ஒரு இமெயிலை அனுப்பவும், திறக்கவும் முடியும் என்பதையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
    நீங்கள் ஒரு ஜிமெயில் யூசரா? உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அனுதினமும் மின்னஞ்சல்களை அனுப்ப அதை பயன்படுத்தினால், அதே ஜிமெயில் வழியாக ரகசியமாக ஒரு இமெயிலை அனுப்பவும், திறக்கவும் முடியும் என்பதையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஆம்! சிக்கலில் சென்று முடியும் சில அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க உதவும் பொருட்டு, ஒரு மின்னஞ்சலை அனுப்பவும் திறக்கவும் ஜிமெயிலின் சீக்ரெட் மோட்-ஐ பயன்படுத்தலாம்.

    இந்த வசதியை நீங்கள் ஐபோன், ஆண்ட்ராய்டு, ஐபாட் அல்லது கம்ப்யூட்டரிலும் கூட பயன்படுத்தலாம் மற்றும் இதன் கீழ் மெசேஜ்கள் மற்றும் அட்டாச்மென்ட்களை ரகசியமாக அனுப்பலாம். மேலும் மெசேஜ்களுக்கான காலாவதித் தேதியை அமைக்கவும் இந்த சீக்ரெட் மோட்-ஐ பயன்படுத்தலாம் அல்லது எந்த நேரத்திலும் கொடுத்த அணுகலை திரும்பப் பெறலாம்.

    ALSO READ |  இந்த ஸ்மார்ட்போன்களில் Youtube, Gmail இயங்காது - கூகுள் தடை பின்னணி என்ன?

    குறிப்பிடத்தக்க வகையில், சீக்ரெட் மோட் வழியாக மெசேஜ்களை பெறுபவர்களும் கூட, முழு ரகசியமும் பேணப்படுவதை உறுதிசெய்யும் வண்ணம், பார்வேட், காப்பி, பிரிண்ட் மற்றும் டவுன்லோட் போன்ற விருப்பங்களை பெற மாட்டார்கள்.

    இருப்பினும் பெறுநர்கள் தற்செயலாக உங்கள் மின்னஞ்சலைப் பகிர்வதை இந்த சீக்ரெட் மோட் தடுத்தாலும் கூட, உங்கள் மெசேஜ்கள் அல்லது அட்டாச்மென்ட்களின் ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது புகைப்படங்களை எடுப்பதை இது தடுக்காது. மேலும், தங்கள் கணினியில் மால்வேர் ப்ரோகிராம்களை கொண்ட பெறுநர்கள் உங்கள் மெசேஜ்கள் அல்லது அட்டாச்மென்ட்களை நகலெடுக்கவோ அல்லது டவுன்லோடு செய்யவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ALSO READ |  உங்கள் வேலையை ஈஸியாக்க ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள 7 புதிய வழிகள்!

    கம்ப்யூட்டர் வழியாக சீக்ரெட் இமெயில் மற்றும் அட்டாச்மென்ட்களை அனுப்புவது எப்படி?

    நீங்கள் அலுவலக அல்லது பள்ளி தொடர்புடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்துகிறீர்கள் எனில், சீக்ரெட் மோட்-ஐ பயன்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் அட்மின்-ஐ தொடர்புகொள்ள வேண்டும்.

    1. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, ஜிமெயிலுக்குச் சென்று, கம்போஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.

    2. பின் விண்டோவின் கீழ் வலதுபுறத்தில், சீக்ரெட் மோட்-ஐ இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

    ALSO READ |  இன்னும் சில பயனர்களுக்கு ஜிமெயில் சரியாக வேலை செய்யவில்லை: கூகுள் நிறுவனத்தின் விளக்கம் என்ன?

    3. காலாவதியாகும் தேதி மற்றும் பாஸ்க்கோட்-ஐ செட் செய்யவும். இந்த செட்டிங்ஸ் ஆனது டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் அட்டாச்மென்ட்கள் என இரண்டிற்குமே பொருந்தும். ஒருவேளை நீங்கள் "எஸ்எம்எஸ் பாஸ்க்கோட் இல்லை" என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், ஜிமெயில் ஆப்பைப் பயன்படுத்தும் பெறுநர்கள் அதை நேரடியாகத் திறக்க முடியும். ஜிமெயிலைப் பயன்படுத்தாத பெறுநர்களுக்கு பாஸ்க்கோட் ஆனது மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

    நீங்கள் "எஸ்எம்எஸ் பாஸ்க்கோட்" என்பதைத் தேர்வுசெய்தால், பெறுநர்கள் ஒரு குறுஞ்செய்தி மூலம் குறிப்பிட்ட பாஸ்க்கோட்-ஐப் பெறுவார்கள். இந்த இடத்தில் பெறுநரின் தொலைபேசி எண்ணை உள்ளிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், உங்களுடைய தொலைபேசி எண்ணை அல்ல.

    4. இப்போது சேவ் (Save) என்பதைக் கிளிக் செய்யவும் :

    ALSO READ |  நீங்கள் இறந்த பிறகு உங்கள் கூகுள், ஜிமெயில் டேட்டா என்ன ஆகும் தெரியுமா? இதோ முழு விவரம்!

    ஐபோன், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், ஐபாட் வழியாக சீக்ரெட் இமெயில் அனுப்புவது, திறப்பது எப்படி?

    1. ஜிமெயில் ஆப்பை த் திறக்கவும்.
    2. கம்போஸ் என்பதைத் கிளிக் செய்யவும்
    3. மேல் வலதுபுறத்தில், 'மோர்' என்கிற விருப்பத்தின் கீழ் சீக்ரெட் மோட்-ஐ அடையவும்.
    4. சீக்ரெட் மோட்-ஐ இயக்கவும்.
    5. காலாவதி தேதி, பாஸ்க்கோட் மற்றும் பிற கட்டுப்பாடுகளை செட் செய்யவும். பின்னர் நாம் மேற்கண்ட அதே "எஸ்எம்எஸ் பாஸ்க்கோட் இல்லாமல்" மற்றும் "எஸ்எம்எஸ் பாஸ்க்கோட் உடன்" என்கிற வழிமுறையை பின்பற்றவும்.
    6. கடைசியாக 'டன்' (Done) என்பதை கிளிக் செய்யவும்.

    கொடுத்த அணுகலை முன்கூட்டியே அகற்றுவது எப்படி?

    சீக்ரெட் மோட் வழியாக அனுப்பினாலும் கூட, காலாவதி தேதிக்கு முன் உங்கள் பெறுநர் மின்னஞ்சலைப் பார்ப்பதையும் நீங்கள் நிறுத்தலாம்.

    1. உங்கள் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், ஐபோன் அல்லது ஐபாட் வழியாக ஜிமெயிலைத் திறக்க வேண்டும்.
    2. கம்பியூட்டர் வழியாக இதை செய்வோர் இடதுபுறத்தில் உள்ள 'சென்ட்' விருப்பத்தை தேர்வு செய்யவும். ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், ஐபோன் அல்லது ஐபாட் போன்றவற்றில் ​​மெனுவை கிளிக் செய்து 'சென்ட்' விருப்பத்தை அணுகலாம்.
    3. இப்போது சீக்ரெட் இமெயிலைத் திறக்கவும்.
    4. பின்னர் அணுகலை அகற்று (ரிமூவ் அக்செஸ்) என்பதைக் கிளிக் செய்யவும்

    ALSO READ |  உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்றுவது எப்படி? படிப்படியான எளிய வழிமுறை!

    சீக்ரெட் மோட்-இல் அனுப்பப்பட்ட மின்னஞ்சலை திறப்பது எப்படி?

    1. காலாவதி தேதி வரை அல்லது அனுப்புநர் அணுகலை அகற்றும் வரை நீங்கள் குறிப்பிட்ட மெசேஜ் மற்றும் அட்டாச்மென்ட்களைப் பார்க்கலாம்.
    2: குறிப்பிட்ட ரகசிய மின்னஞ்சலைத் திறக்க பாஸ்க்கோட்-ஐ உள்ளிட வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Android, IPhone, Smartphone

    அடுத்த செய்தி