Google, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் தனது ஜிமெயில் ஆப்ஸ்க்கான தனியுரிமை லேபிள்களை எவ்வித அறிவிப்புமின்றி அமைதியாக சேர்த்துள்ளது.
ஐபோனில் ஜிமெயில் ஆப்ஸ் சேகரிக்கும் தரவை வெளிப்படுத்தும் தனியுரிமை லேபிள்கள் கூடுதலாக இருந்தபோதிலும், நிறுவனம் iOS க்கான மெயில் ஆப்ஸின் அப்டேட்டை இன்னும் வெளியிடவில்லை. Apple கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து ஆப்ஸ் தனியுரிமை லேபிள்களை (app privacy labels) செயல்படுத்துகிறது, ஆனால் கூகுள் இந்த அம்சத்தை சப்போர்ட் செய்வதில் கொஞ்சம் சுணக்கம் காட்டி வருகிறது .
iOS க்கான YouTube போன்ற மிகச் சில இயங்குதளங்கள் அப்டேட்டைப் பெற்றிருந்தாலும், ஜனவரி மாதத்திற்குள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கூகுள் ஆப்ஸ்களுக்கான அப்டேட் மற்றும் பிரைவசி லேபிள்களை வெளியிடுவதாக Google முன்னர் கூறியிருந்தது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஜிமெயிலுக்கான தனியுரிமை லேபிள்களின்படி, பர்ச்சேஸ்கள், கோர்ஸ் லொகேஷன், தொடர்பு பற்றிய தகவல், யூசர் கன்டென்ட், சர்ச் ஹிஸ்டரி, அடையாளங்காட்டிகள், பகுப்பாய்வு நோக்கங்களுக்கான ஆப்ஸ் தரவு, தயாரிப்பு தனிப்பயனாக்கம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு போன்ற தரவை சேகரிக்கிறது.
இதன் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்கான யூசர் ஐடி மற்றும் ஆப்ஸ் தரவு மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களுடன் பகிரப்படுகின்றன. இந்த பதிவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளபடி, iOS க்கான ஜிமெயில் ஆப்ஸ் இன்னும் அப்டேட்டை பெறவில்லை, மேலும் Google டிசம்பர் 2020 இறுதியிலிருந்து முதல் பதிப்பு 6.0.201115 ஐ இயக்கி வருகிறது ஆனால் இந்த தகவல் யாருக்கும் தெரியாது. iOS க்கான ஜிமெயில் இந்த மாத தொடக்கத்தில் ஆப்ஸ் காலாவதி பற்றிய எச்சரிக்கைகளையும் காண்பித்தது.
Also read... அமேசான் வழங்கும் 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் சேல்' தொடங்கியது: iPhone 11 pro, Oneplus 8 pro ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள்!
ஆனால் இதற்கு Google என்ன செய்தது தெரியுமா, தளத்தை மேம்படுத்தாமல் அந்த எச்சரிக்கையை மட்டும் கூகுள் நீக்கியது. iOS இல் ஆப்ஸ்களுக்கான அப்டேட் தாமதம் ஒரு Bug காரணமாக இருந்தது என்றும் கூகிள் கூறியது. இருப்பினும், நிறுவனம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்ஸ்களை அப்டேட் செய்ய தொடங்கியுள்ளது. இதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட Google ஆப்ஸ்களும் தனியுரிமை லேபிள்களைச் சேர்க்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், Apple கடந்த சில நாட்களுக்கு முன்பு iOS க்கான YouTube அப்டேட்டை முதல் முறையாக வெளியிட்டது. சமீபத்திய பதிப்பு (கடைசியாக பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்டது) சில பிழைத் திருத்தங்களைத் தவிர வேறு எந்த முக்கிய அம்சங்களையும் அல்லது குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் நிறுவனம் முன்னிலைப்படுத்தவில்லை. கூகிள் இன்னும் தனியுரிமை லேபிள்களைச் சேர்க்கவும் இல்லை iOS க்கான Google Mapsக்கான அப்டேட்டையும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.