ஆண்டுக்கு ஆண்டு 100% அதிக வளர்ச்சி... யூடியூப்பில் கொடிநாட்டும் இந்தியர்கள்...!

1,200 இந்தியர்கள் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற மைல்கல் சாதனையாளர்கள் இந்தியாவில்தான் அதிகம்.

news18
Updated: April 10, 2019, 3:58 PM IST
ஆண்டுக்கு ஆண்டு 100% அதிக வளர்ச்சி... யூடியூப்பில் கொடிநாட்டும் இந்தியர்கள்...!
யூடியூப் பயனர்கள்
news18
Updated: April 10, 2019, 3:58 PM IST
கூகுள் நிறுவனத்தின் சொந்த வலைதளமான யூடியூப் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே இந்தியாவில்தான் நாங்கள் அதிக பயனர்களைக் கொண்டிருக்கிறோம். அதில் மாதம் ஆக்டிவ் யூசர்களாக 265 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளோம். இது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் 18 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யூடியூப் தனது பயனர்கள் வளர்ச்சி, பயன்பாடு, தளத்தின் வளர்ச்சி குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவுடனான தங்களது வளர்ச்சி எப்படி என்பதையும் வெளியிட்டுள்ளது.

யூடியூப் என்பது இன்று பலதரபட்ட செய்திகள், விஷயங்களை எடுத்துக் கொள்ள மக்கள் விரும்பும் முதல் தளமாக இருக்கிறது. அதேபோல் பொழுதுபோக்கு சார்ந்தும், தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், எடுத்துக் கொள்ளவும் யூடியூப் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

”யூடியூம் தளமானது பலதரப்பட்ட தகவல்களை பலதரப்பட்ட மக்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு இடமாக இருக்கிறது. மக்களை எப்போதும் இணைப்பில் வைத்துக் கொள்ளும் தளமாகவும் இருக்கிறது “ என யூடியூபின் சிஇஒ சுசன் வோஜ்சிக்கி பேட்டியில் கூறியுள்ளார்.



அறிக்கையில் உலக அளவில் இந்தியா எங்களுக்கு மிகப்பெரும் பயனர்களைக் கொண்ட நாடு. அதுவும் அதிவேக வளர்ச்சி கொண்ட நாடு என குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒரே ஆண்டில் மொபைல் ஃபோன்களில் யூடியூப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. 60 சதவீதம் உலகின் மிக முக்கிய நாடுகளில் உள்ள மெட்ரோ சிட்டிகளிலிருந்து பார்வையாளர்கள் வருவதாக குறிப்பிட்டுள்ளது.
Loading...
யூடியூபில் சேனல் தொடங்கும் இந்தியர்கள் மக்களை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற மைல்கல் சாதனையாளர்கள் இந்தியாவில்தான் அதிகம். ஐந்து வருடங்களுக்கு முன் வெறும் இரண்டு பேர் மட்டும்தான் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

”ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் யூடியூபின் வளர்ச்சி 100 சதவீதம் அதிகரிக்கிறது” என யூடியூபின் தயாரிப்பு மேலாண்மை அதிகாரி ஆடம் ஸ்மித் குறிப்பிடுகிறார்.
First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...