ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் திட்டம் ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு

ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் திட்டம் ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு
  • Share this:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதற்கான திட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, ஜிஐசாட்-1 என்ற செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

நாளை மாலை 5:43 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading