ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க உதவும் புதிய செயலி : மத்திய அரசு அறிமுகம்!

கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க உதவும் புதிய செயலி : மத்திய அரசு அறிமுகம்!

ஜல்தூத்

ஜல்தூத்

நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளின் அளவை அளவிடுவதும் அவ்வபோது கவனிப்பதும் அவசியமானது என அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று புதுதில்லியில் நடைபெறும் விழாவில் “ஜல்தூட்” எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள கிராமங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க, JALDOOT செயலியை ஊரக வளர்ச்சி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜல்தூத் செயலியானது கிராம ரோஜ்கர் சஹாயக் (ஜிஆர்எஸ்) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை வருடத்திற்கு இரண்டு முறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) அளவிட உதவும். ஒவ்வொரு கிராமத்திலும், போதுமான அளவீட்டு இடங்கள் (2-3) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவை அந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவிட உதவும்.

சென்னையில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் 14 ! விலை குறையுமா?

காடு வளர்ப்பு நீர்நிலை மேம்பாடு மற்றும் புதுப்பித்தல், மழைநீர் சேகரிப்பு மற்றும் பலவற்றின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கு நாடு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எவ்வாறாயினும், நிலத்தடி நீரைத் திரும்பப் பெறுவதும், மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் பயன்பாடும் நாட்டின் பல பகுதிகளில் முக்கியமான நிலையை எட்டியுள்ளது.

இதன் விளைவாக நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து விவசாயிகளுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளின் அளவை அளவிடுவதும் அவ்வபோது கவனிப்பதும் அவசியமானது என அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

இந்த செயலியானது வலுவான தரவுகளுடன் பஞ்சாயத்துகளின் செயல்பாடுகளை எளிதாக்கும். மேலும் இது மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக திட்டமிடுவதற்கு பயன்படுத்தப்படும். நிலத்தடி நீர் தரவுகள் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டம் (GPDP) மற்றும் மகாத்மா காந்தி NREGA திட்டமிடல் பயிற்சிகளின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும். மேலும், தரவு பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் பிற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Application, Panchayat, Water management