ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி இலவச சப்ஸ்க்ரிப்ஷன் பெற வேண்டுமா?

பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி இலவச சப்ஸ்க்ரிப்ஷன் பெற வேண்டுமா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஏர்டெல் ரூ. 1000க்கும் குறைவான மூன்று போஸ்ட்பெய்டு திட்டங்களை வழங்கி வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கடந்த சில மாதங்களாக பிரதானமான பொழுதுபோக்கு அம்சமாக OTT தளங்கள் மாறி உள்ளன. ஆனால், எல்லா யூசர்களும் எல்லா OTT தளங்களுக்கும் சந்தா செலுத்துவதில்லை. OTT தளங்களை ஒப்பிடும்போது நெட்ஃப்ளிக்ஸ் சந்தா மிகவும் விலை அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், சமீபத்தில் OTT சப்ஸ்க்ரிப்ஷன் விலையில் அதிகரித்துள்ளது. ஆனால் நீங்கள் எல்லா OTT தளங்களின் சப்ஸ்க்ரிப்ஷனையும் இலவசமாக பெறலாம். அதைப்பற்றி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவின் பிரதானமான டெலிகாம் நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi, மூன்றுமே சமீபத்தில் தங்களுடைய ப்ரீபெய்டு திட்டங்களின் விலையை 25% வரை அதிகரித்துள்ளன. இத்திட்டங்களில் வழங்கப்பட்டு வந்த OTT தளங்கள் ஸ்ட்ரீமிங் நன்மைகளையும் குறைத்துள்ளன. ஆனால் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் போஸ்ட்பெய்டு திட்டங்களில் பல்வேறு OTT தளங்களுக்கும் இலவசமாக மெம்பர்ஷிப்களை வழங்குகிறது.

ரூ. 1000க்கும் குறைவான ஜியோ போஸ்ட்பெய்டு திட்டங்கள் :

ஜியோ போஸ்ட்பெய்டு திட்டம் ரூ. 399ல் இருந்து தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் 25 ஜிபி டேட்டா அன்லிமிட்டட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறதும். மேலும் இந்த திட்டத்தில் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் ஹாட்ஸ்டார், மற்றும் ஜியோ டிவி ஆகிய OTT தளங்களுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டா டேட்டா வேண்டும் என்றால் ரூ.599 திட்டத்தை நீங்கள் பெறலாம். இதில் 100 ஜிபி டேட்டா உள்ளது. மேலும் ரூ. 799 திட்டத்தில் 150 ஜிபி டேட்டா மற்றும் ரூ. 999 திட்டத்தில் 200 ஜிபி டேட்டாவும், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தளங்களின் சந்தாவுடன் வழங்கப்படுகிறது.

ரூ. 1000க்கும் குறைவான ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டங்கள் :

ஏர்டெல் ரூ. 1000க்கும் குறைவான மூன்று போஸ்ட்பெய்டு திட்டங்களை வழங்கி வருகிறது. இவற்றில் டேட்டா பேக், அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள் தவிர்த்து ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டல் எக்ஸ்ட்ரீம் ஆப்பின் ஸ்ட்ரீமிங் நன்மையையும் வழங்கப்படுகிறது.

ரூ. 399 போஸ்ட்பெய்டு திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 40 ஜிபி டேட்டாவும், 200 ஜிபி வரை ரோல் ஓவர் செய்துகொள்ளும் அம்சமும் மேலே கூறப்பட்டிருக்கும் நன்மைகளுடன் வழங்கப்படுகிறது.

ரூ. 499 போஸ்ட்பெய்டு திட்டத்தில் மாதாமாதம் 75 ஜிபி டேட்டாவும், மூன்றாவது ரூ. 999 போஸ்ட்பெய்டு திட்டத்தில் மாதத்திற்கு 150 ஜிபி டேட்டாவும் மேலே குறிப்பிட்ட நன்மைகளோடு, அமேசான் பிரைம் மற்றும் ஹாட்ஸ்டார் தளங்களுக்கான ஓராண்டு சந்தாவை வழங்குகிறது.

Also read... Tudum என்ற புதிய வெப்சைட்டை அறிமுகப்படுத்திய Netflix!

ரூ. 1000க்கும் குறைவான Viபோஸ்ட்பெய்டு திட்டங்கள் :

ஜயோ மற்றும் ஏர்டெல் வழங்கும் திட்டங்களை போலவே Vi வழங்கும் போஸ்ட்பபெய்டு திட்டமும் ரூ. 399 முதல் தொடங்குகிறது. இந்த திட்டத்தில் 40 ஜிபி டேட்டா மற்றும் Vi மூவிஸ் மற்றும் TV நன்மைகள் கிடைக்கின்றன. ரூ. 499 திட்டத்தில் 75 ஜிபி டேட்டா உடன் ஓராண்டு அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், Vi மூவிஸ் மற்றும் TV நன்மைகள் கிடைக்கின்றன.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Amazon Prime, Hotstar, Jio TV, Netflix