இனி ‘கூகுள் ஃபோட்டோஸ்’-க்குப் பதிலாக இலகுவான ‘கேலரி கோ’..!

கேலரி கோ

கூகுள் ஃபோட்டோஸ் இதுவரையில் சர்வதேச அளவில் 1 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கூகுள் ப்ளே ஸ்டோரில் கூகுள் நிறுவனத்தின் சார்பில் புதிதாகக் களம் இறக்கப்பட்டுள்ள ஆப் ‘கேலரி கோ’.

அதிக ஸ்டோரேஜ் தேவைப்படாத, அதிக டேட்டா தேவைப்படாத புகைப்படங்கள் சேமிக்கும் ஆப் ஆக இந்த ‘கேலரி கோ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நைஜீரியாவில் நடந்த கூகுள் விழாவில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

புகைப்படங்களை பயனாளர்கள் இலகுவான ஒரு ஆப் மூலம் சேமிக்க வேண்டுமென்றால் கேலரி கோ, அதற்குத் தகுந்ததாக இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. புகைப்படங்களைத் தேடவும் எடிட் செய்யவும் சீரமைக்கவும் இந்த ஆப் உதவும். மேலும் ஃபோனில் இருந்தும் புகைப்படங்களை எஸ்டி கார்டு-க்கு மாற்றவும் இந்த ஆப் உதவும்.

ஆட்டோ எடிட் அம்சங்களாக உள்ள க்ராப், ரொடேட் ஆகிய ஆப்ஷன்களும் இந்த ஆப்-ல் கொடுக்கப்பட்டுள்ளன. கேலரி கோ-வை ஸ்மார்ட்ஃபோனில் இன்ஸ்டால் செய்ய வெறும் 10MB ஸ்டோரேஜ் இருந்தால் போதுமானது ஆகும். கூகுள் ஃபோட்டோஸ் இதுவரையில் சர்வதேச அளவில் 1 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதே ஆதரவு கேலரி கோ-வுக்கும் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் கூகுள் ஃபோட்டோஸ் தலைவர் டேவிட் லெய்ப். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘போலோ’ என்னும் குழந்தைகளுக்கான ஆங்கிலம் கற்றறியும் ஆப் கானா மற்றும் நைஜீரியா பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: ஆகஸ்ட் மாதம் அட்டகாச விலையில் அறிமுகமாகும் நோக்கியா 6.2, நோக்கியா 7.2..!
Published by:Rahini M
First published: