ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ’ககன்யான்’ திட்டம் - நெல்லையில் நடந்த சோதனை வெற்றி!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ’ககன்யான்’ திட்டம் - நெல்லையில் நடந்த சோதனை வெற்றி!

ககன்யான்

ககன்யான்

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரத்தின் பரிசோதனை நடந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli |

  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பயன்படுத்தும் கிரையோஜெனிக் இயந்திர சோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது, ​​2022 ஆம் ஆண்டிற்குள் இலக்கை அடைவதற்கான இலக்குடன் ககன்யான் திட்டத்தை 2018 இல் அறிவித்தார். 2020-21 ஆம் ஆண்டில் கோவிட் -19 தொற்றுநோய்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, திட்டத்தின் வேகம் தடைபட்டது மற்றும் இப்போது விண்வெளி நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டத்தை தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  இஸ்ரோ அடுத்த ஆண்டு டிசம்பரில் ஆளில்லா சோதனை விமானத்தை நடத்த திட்டமிட்டுள்ளது, ஆனால் அதற்கு முன் 17 வெவ்வேறு சோதனைகளை நடத்தவுள்ளது. அதில் ஒரு பகுதியாக ககன்யான் திட்டத்தின் கிரையோஜெனிக் எந்திர சோதனை நெல்லையில் நடைபெற்று வருகிறது.

  இஸ்ரோவின் கனவு திட்டம்.. ககன்யான் ஏவுகணைக்கான முக்கியக் குழுமங்களை இஸ்ரோவுக்கு ஒப்படைத்த ஹிந்துஸ்தான் நிறுவனம் !

  நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட உள்ளாக்க மையம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரங்கள் சோதனை நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரத்தின் பரிசோதனை நடந்தது.

  கிரையோஜெனிக் எந்திரத்தின் சி.20 இ 11 எம்.கே.111 பரிசோதனை 28 விநாடிகள் நீடித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

  செய்தியாளர்:  ஐயப்பன், திருநெல்வேலி

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Gaganyan, ISRO, Thirunelveli