ஃபேஸ்புக்கின் ‘லிப்ரா’ கரன்சி நிதிஅமைப்பைக் குலைக்குமா? ஜி7 நாடுகள் ஆலோசனை

உலக நாடுகள் பலவும் தனியார் நிறுவனம் ஒன்று அரசின் பணியை ஏற்பதா என்ற கேள்வியை முன்வைக்கின்றன.

Web Desk | news18
Updated: July 21, 2019, 3:55 PM IST
ஃபேஸ்புக்கின் ‘லிப்ரா’ கரன்சி நிதிஅமைப்பைக் குலைக்குமா? ஜி7 நாடுகள் ஆலோசனை
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 21, 2019, 3:55 PM IST
ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக ‘லிப்ரா’ என்னும் டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்த கடுமையான விதிமுறைகள் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வேண்டும் என ஜி7 கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜி7 கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளுக்கான நிதித்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஃபிரான்ஸில் நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில் ஜி7 கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த 7 நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் லிப்ரா என்னும் டிஜிட்டல் பணம் மீதான விதிமுறைகள், அபாயங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன. லிப்ரா வெளியானல் அது சர்வதேச நிதி அமைப்பை சீர்குலைக்காமல் இருக்குமா என்பதையும் உறுதிபடுத்த உலக நாடுகள் இணைந்துள்ளன.

ஜி7 கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் நிதி அமைச்சர் ப்ருனோ லீ மேர் கூறுகையில், “ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு உள்ள அதே நாணய உரிமை ஒரு தனியாருக்கு கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்கிறார்கள். எவ்வித கட்டுப்பாடுகளும் உத்தரவாதங்களும் இன்றி எந்த உரிமையும் கொடுக்கப்படாது.


தனியாருக்கு என்று தனி நாணய அல்லது பணம் மதிப்பு இருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றார். பிரான்ஸ் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவும் தனியார் நிறுவனம் ஒன்று அரசின் பணியை ஏற்பதா என்ற கேள்வியை முன்வைக்கின்றன. மேலும், கூகுள், ஃபேஸ்புக் போன்ற டெக் ஜாம்பவான்கள் எந்த நாட்டில் பணம் ஈட்டினாலும் அதற்கேற்ப வரி விதிக்கவும் ஜி7 கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் பார்க்க: ஹூவே-க்கு அமெரிக்காவில் தடையா?- வெள்ளை மாளிகையில் முக்கிய ஆலோசனை!
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...