செல்போன் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனம் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தங்களது தயாரிப்பில் வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தும் பல்வேறு அப்டேட்டுகளை ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருவதுதான்.
அதனால் ஆப்பிளின் ஒவ்வோர் அப்டேட் மாடல்களுக்காகவும் காத்துக்கிடக்கிறார்கள் செல்போன் பிரியர்கள். அப்படி வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாடல் தான் ஐபோன் -14 ப்ரோ. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள அந்த மொபைல் மிக நவீன கேமராக்களை கொண்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மிகச் சிறந்த உதாரணம். ஆம் முழுக்க முழுக்க இந்த ஐபோன் -14 ப்ரோவை வைத்து தான் 30 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தை தயாரித்து இருக்கிறார் விஷால் பரத்வாஜ்.
முழுக்க முழுக்க ஐபோன் 14 ப்ரோவில் படமாக்கப்பட்ட குறும்படத்தின் பெயர் - ஃபர்சாட் (Fursat) ஆகும். இது பாலிவுட் பாணியிலான, அதே சமயம் இசையை மையமாக கொண்ட ஒரு குறும்படமாகும். விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ள இந்த குறும்படத்தின் நீளம் வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும் இந்த படத்தில் பாடல்கள் மற்றும் நடனங்கள் என வழக்கமான சினிமாவில் உள்ள அனைத்துமே உள்ளது. ‘ஃபர்சாட்’ திரைப்படத்தை யூட்யூப் தளத்தில் பார்க்கலாம். அதே போல் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவும் இந்த குறும்படத்தை பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோனை எவ்வளவு அருமையாக கையாள முடியும் என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டு ‘ஃபர்சாட்’ திரைப்படம் என்று புகழந்து தள்ளியிருக்கிறார் பிரபல புகைப்பட இயக்குனரான ஸ்வப்னில் சோனாவனே. ஐபோன்-14ப்ரோ மாடலில் இருக்கும் ஆக்ஷன் மோட் ஒரு அற்புதமான அப்டேட். ஆக்ஷன் மோட்-ஐ பயன்படுத்தி எவ்வளவு வேகமாக ஓடும் ஒரு காட்சியை பதிவு செய்தாலும், அது மிக அருமையாக, ஸ்டேண்டர்ட் குவாலிட்டியில் பதிவாகிறது என்கிறார் சோனாவனே. இதில் இருக்கும் சினிமா மோட் பெரிய நவீன சினமா கேமராக்களில் இருக்கும் ஃபோகஸ் புல்லரை போல வேலை செய்கிறது.
ஆக்ஷன் மோட் ஆனது நிலையான, மென்மையான வீடியோவை வழங்குகிறது. வீடியோ மோடில் இருந்தபடியே ஆக்ஷன் மோடிற்கு மிக எளிதாக மாற முடிகிறது என தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் குறித்து சிலாகிக்கிறார் குறும்பட இயக்குநர் விஷால் பரத்வாஜ். ஓடுவது, நடப்பது, நகர்வது போன்ற சூழ்நிலைகளில் இது கூடுதல் ஸ்டெபிலைசேஷனை வழங்குகிறது என்கிறார் விஷால் பரத்வாஜ். ஆப்பிள் நிறுவனம் தனது புதிய புராடக்ட்கள் மூலம் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது. இனி வரும் காலத்தில், ஆப்பிள் ஐபோன்-14 ப்ரோவைக் கொண்டு மிக எளிதாக, சிக்கனமாக முழு நீள சினிமாவே தயாரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple, Camera, IPhone, Short film