ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சிம் கார்டு பெற போலி ஆவணம் சமர்பித்தால் ஓராண்டு சிறை - வரைவு மசோதாவில் அதிரடி!

சிம் கார்டு பெற போலி ஆவணம் சமர்பித்தால் ஓராண்டு சிறை - வரைவு மசோதாவில் அதிரடி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஒரு நபர் சிம் கார்டு வாங்க போலியான ஆவணங்களைக் கொடுத்தாலோ அல்லது வாட்ஸ்அப், சிக்னல் அல்லது டெலிகிராம் போன்ற ஓவர்-தி-டாப் (OTT) தளங்களில் தவறான அடையாளத்தைக் காட்டினாலோ அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட கூடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

போலி அடையாள ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கி பயன்படுத்துபவர்கள் அல்லது வாட்ஸ்அப், சிக்னல் அல்லது டெலிகிராமில் தங்களது அடையாளத்தை தவறாக காட்டுபவர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் சட்டதிட்டங்கள் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

சைபர் கிரிமினல்கள் மோசடிகளில் ஈடுபட ஏதுவாக சிம் கார்டுகளை பெற போலி ஆவணங்களை பயன்படுத்துவதாகவும், மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களுக்கு கால் செய்ய OTT Apps-களில் தங்கள் அடையாளத்தை வேண்டுமென்றே மறைப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே ஒரு நபர் சிம் கார்டு வாங்க போலியான ஆவணங்களைக் கொடுத்தாலோ அல்லது வாட்ஸ்அப், சிக்னல் அல்லது டெலிகிராம் போன்ற ஓவர்-தி-டாப் (OTT) தளங்களில் தவறான அடையாளத்தைக் காட்டினாலோ அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட கூடும். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிதாக 'தொலைத்தொடர்பு மசோதா 2022-ஐ உருவாக்கி சட்டமாக இயற்றி அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெலிகாம் யூஸர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் வரைவு மசோதாவில் மத்திய அரசு இந்த பரிந்துரைகளை செய்துள்ளது.

Read More : இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆபாச வெப்சைட்களுக்கான பட்டியலில் புதிதாக 67 வெப்சைட்கள் சேர்ப்பு.!

ஆன்லைன் நிதி மோசடி அல்லது பிற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த அபராதங்கள் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மசோதாவின் அதிகாரப்பூர்வ விவரங்களுக்குச் சென்றால், ஒவ்வொரு டெலிகாம் யூஸரும் தங்களுக்கு யார் கால் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம் என்ற விதிமுறை உள்ளது. போலி ஆவணங்களை வைத்து சிம் கார்டுகளை பெற்று மக்களை ஏமாற்றுவதாலும், அவர்கள் OTT Apps-களில் தங்கள் அடையாளத்தை தவறாக பயன்படுத்தி மக்களை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ள அரசு அதிகாரிகள், இந்தக் குற்றங்களைக் கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு புதிய வரைவு மசோதாவில் (தொலைத் தொடர்பு வரைவு மசோதா) அபராதம் மற்றும் சிறை என்ற கடும் விதிகளை சேர்த்துள்ளது என்கின்றனர்.

முன்மொழியப்பட்ட தொலைத்தொடர்பு மசோதா, பொதுத் துறையின் (DOT) பொது ஆலோசனைக்காகவும், தொழில்துறை பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களுக்காகவும் இப்போது பொது களத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள பிரிவு 4 மற்றும் துணைப்பிரிவு 7-ன் கீழ், அடையாளத்தை தவறாகக் குறிப்பிட்டு ஏதேனும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் செய்தால், ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இவர்களுக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் ரத்து செய்யப்படும். இவற்றைக் கடுமையான குற்றங்களாகக் கருதி, அந்தச் செயல்களில் ஈடுபடுபவர்களை எந்தவித பிடியாணையோ அல்லது நீதிமன்றத்தின் முன் அனுமதியோ இன்றி போலீஸார் கைது செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில் வர உள்ள புதிய தொலைத்தொடர்பு மசோதா இணைய குற்றங்களை தடுக்கும். OTT-க்களுக்கு KYC இணக்கத்தை கட்டாயமாக்குவதும் இந்த மோசடிகளை தடுக்க உதவும் என்றார்.

அதே போல ஒருவருக்கு கால் வரும் போது கால் செய்பவரின் பெயரை ஸ்கிரீனில் வர அனுமதிக்கும் ஒரு மெக்கானிசமை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் DoT கேட்டுள்ளது. இந்த பெயர் அழைப்பை மேற்கொள்ளும் தொலைத்தொடர்பு சந்தாதாரரின் KYC ஆவணங்களில் இருந்து இருக்கும்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Aadhar, Online Frauds, Pan card