Home /News /technology /

ஆட்குறைப்பு முதல் சம்பள மாற்றம் வரை – ட்விட்டர் ஊழியர்கள் மாற்றங்கள்

ஆட்குறைப்பு முதல் சம்பள மாற்றம் வரை – ட்விட்டர் ஊழியர்கள் மாற்றங்கள்

elon musk

elon musk

Twitter Elon Musk | எலான் மஸ்க் முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஊழியர்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றிய சில விவரங்கள் இங்கே.

கடந்த சில நாட்களாக தலைப்பு செய்தியாக இருப்பது எலான் மஸ்க் தான். டிவிட்டருடன் ஒரு கடுமையான பனிப் போரை எதிர்கொண்டு வந்த எலான் மஸ்க் ஒரு வழியாக ட்விட்டரை 44 பில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கிவிட்டார். கருத்து சுதந்திரம் இல்லை, பதிவுகளை திருத்துவதற்கு வசதி இல்லை என்று தொடர்ந்து ட்விட்டர் மீது குற்றச்சாட்டு பகிர்ந்து வந்த எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன் டிவிட்டரின் கணிசமான பங்குகளை வாங்கினார்.

அதைத் தொடர்ந்து தற்போது ட்விட்டரையே வாங்கிவிட்டார். டிவிட்டர் இனி ஒரு தனிமனிதரின் சொத்து என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு டிவிட்டர் யூசராக பல தரப்பட்ட யூசர்களின் குரலாக இருந்த எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தின் முதலாளியாக ஊழியர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எலான் மஸ்க் முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஊழியர்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றிய சில விவரங்கள் இங்கே.

டிவிட்டர் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்களா?

எலான் மஸ்க் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுடன் அப்படியே தொடர்வாரா, அல்லது அணி ஊழியர்களின் பணிநீக்கம் அல்லது ஆட்குறைப்பு நடைபெறுமா என்பதுதான் மிகப்பெரிய விவாதமாக இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் எலான் மஸ்க் தரப்பில் எந்த விவரங்களும் கூறப்படவில்லை என்றாலும், ட்விட்டரின் புதிய சிஈஓவாக தலைமை பொறுப்பு ஏற்றுக்கொண்ட பராக் அகர்வால் ஊழியர்கள் விஷயத்தில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிவித்திருந்தார். “ஏற்கனவே இருக்கும் கொள்கைகளின் படிதான் நாங்கள் நடப்போம், எனவே இப்பொழுதும் சரி, எலான் மஸ்க் பொறுப்பேற்று டீல் முடிவு செய்த பிறகும் சரி, எப்போதும் இருப்பது போல முடிவுகளை நாங்கள் தான் எடுப்போம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Read More : சூட் அணிந்த கொரிய மாப்பிள்ளை; சேலை அணிந்த இந்திய மணப்பெண் - வைரல் ஆகும் திருமண வீடியோ!


அதே நேரத்தில், எந்த மாற்றமும் நிகழாது என்றும் கூற முடியாது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்திலும் ட்விட்டர் பலவிதங்களில் மாறி இருக்கிறது. எனவே நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக ஒருசில மாற்றங்கள் அவ்வப்போது நடப்பதும் இயல்புதான் என்றும் தெரிவித்திருந்தார்.

டிவிட்டர் ஊழியர்களின் சம்பளம்

டிவிட்டர் இப்பொழுது தனிநபர் ஒருவரின் நிறுவனமாக அவரின் சொத்தாக மாறி இருப்பதால் சம்பளமாக வழங்கப்படும் தொகை மற்றும் சாலரி ஸ்ட்ரக்சர் எனப்படும் அதிலிருக்கும் பிரிவுகள் மாறும் என்று கூறப்படுகிறது. தற்போது ட்விட்டரின் உரிமையாளராக எலான் மஸ்க் இருக்கிறார். ஊழியர்களுக்கு இதில் ஈக்விட்டி ஆப்ஷன்ஸ் எனப்படும் பங்குகள் வழங்கப்படுமா, அல்லது மறுபடியும் பொதுமக்களுக்கு ட்விட்டரின் பங்குகள் விற்பனைக்கு கொடுக்கப்படுமா என்பது இதுவரை சரியாக தெரியவில்லை.

டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரி யார்?

ட்விட்டரின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டார்சியை தோற்கடித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பராக் அகர்வால் பொறுப்பேற்று சில மாதங்கள் தான் ஆகிறது. இன்னும் சில மாதங்களுக்குள் எலான் மஸ்க்கின் இந்த புதிய டீல் முழுவதுமாக நிறைவு செய்யப்படும் வரை அகர்வால் இதே பொறுப்பில் தொடர்வார். அதற்கு பின்பு பொறுப்பு மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் ஆகியவற்றை நானே சொந்தமாக நிர்வகிப்பதால் ட்விட்டரையும் தனது தலைமையில் நடத்தலாம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். எனவே இந்த டீல் முடிந்து நிறுவனம் சட்டப்படி எலான் கைக்குச் செல்லும் வரை தலைமைப் பொறுப்பில் அகர்வால் இருப்பார்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Elon Musk, Twitter

அடுத்த செய்தி