ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஐபிஎல் முதல் CoWin வரை.. இந்த வருடம் கூகுளில் தேடப்பட்ட வார்த்தைகள்..

ஐபிஎல் முதல் CoWin வரை.. இந்த வருடம் கூகுளில் தேடப்பட்ட வார்த்தைகள்..

காட்சி படம்

காட்சி படம்

கூகுளில் எந்த வார்த்தைகள் அதிகமாக தேடப்படுகிறது என்பது ஒரு வணிகத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜினாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் சேர்ச் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கூகுள் சேர்ச்சில் அதைக் குறித்த கீவேர்டுகளை உள்ளிட்டால் உங்களுக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்துமே காட்டப்படும். இதில் பயன்படுத்தப்படும் கீ வேர்டுகள் தான் ஒரு வணிகத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய காரணமாக இருக்கிறது.

கூகுளில் எந்த வார்த்தைகள் அதிகமாக தேடப்படுகிறது என்பது ஒரு வணிகத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியர்கள் கூகுள் சேர்ச்சில் எதைப் பற்றியெல்லாம் அதிகமாக தேடி இருக்கிறார்கள் என்பது பற்றிய அறிக்கையை நேற்று கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Search 2021 என்று அழைக்கப்படும் இந்த அறிக்கையை கூகுள் இந்தியா, 2021 இந்தியாவில் தேடப்பட்ட டாப் தேடல்கள் பற்றி விவரிக்கிறது. இந்தத் தேடல் ட்ரெண்டிங் செய்திகள், வைரல் நியூஸ், விளையாட்டு, பொழுதுபோக்கு, பிரபலங்கள், சினிமா மற்றும் பல்வேறு கேட்டகிரியில் பற்றிய தேடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதிகப்படியான தேடப்பட்ட சொற்களில் கிரிக்கெட் பற்றிய தேடல்கள், கோவிட் தடுப்பூசி மற்றும் உணவு ரெசிபிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

கூகுல் தேடல் 2021 - முதல் மூன்று இடம் :

இந்தியர்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டுக்கு நெருக்கமான உறவு உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக், ஐசிசி T20 உலகக் கோப்பை போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன. மேலும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பற்றிய அறிவிப்பும் தொடர்ந்து வெளியிடப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் இந்தியன் பிரீமியர் லீக் அதிகமாக தேடப்பட்ட சொற்களில் முதல் இடத்தையும் ஐசிசி T20 உலகக் கோப்பை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் இருப்பது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்தி மக்களை முடக்கிப் வைத்திருந்த கொரோனா சம்மந்தப்பட்ட தேடல் சொல், கோவின் – COWin.

CoWin என்பது கொரோனா தடுப்பூசியைக் குறிக்கும். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தடுப்பூசி எங்கே போட்டுக்கொள்ளலாம் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான அப்பாயின்மென்ட் எப்படிப் பெறுவது, தடுப்பூசிகள் ஸ்டாக் இருக்கிறதா? ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அரசு உருவாக்கப்பட்ட இணையதளம் CoWin. எனவே இந்த ஆண்டு கோவிட் பாதிப்பிலிருந்து தப்பிக இந்திய அளவில் அதிகமாக தேடப்பட்ட சொல்லாக CoWin இருக்கிறது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் யூரோ கப் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.

also read : 2021-ல் இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்!

‘Near Me’ என்ற புதிய டிரெண்டு :

கூகுள் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. நமக்கு அருகில் இருக்கும் சேவைகளை அல்லது பொருட்களை விற்கும் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், இருப்பிடத் தகவல் பற்றிய பல்வேறு அம்சங்களை ‘நியர் மீ’ என்ற தேடல் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். வேறு வேறு தேவைகளுக்காக நியர் மீ அதிகமாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும் கோவிட் சம்பந்தப்பட்ட தேடல்களுக்கு ‘நியர் மீ’ இந்த ஆண்டு மிகப்பெரிய டிரெண்டை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘Near Me’ என்ற தேடல் பொறியைப் பயன்படுத்தி கோவிட் பரிசோதனை மையங்கள், மருத்துவமனைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் ஆகியவை அதிகமாக இந்த ஆண்டின் முதல் பாதியில் அதிகம் தேடப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

அடிக்கடி லாக்டவுன் என்று இந்த ஆண்டின் பல மாதங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் உணவு சர்வீஸ், டிபன் சர்வீஸ் மற்றும் பார்சல் வழங்கும் உணவகங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்களையும் அதிகப்படியாக இந்தியர்கள் தேடினர் என்று கூகுள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உணவும், திரைப்படங்களும்:

அடுத்ததாக அதிகம் தேடப்பட்ட கேட்டகிரியில் திரைப்படங்களும் உணவு ரெசிபிகளும் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழியில் ஜெய் பீம் திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக, பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதை தொடர்ந்து மூன்று ஹிந்தி படங்களும் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

ஊரடங்கு நேரத்தில் பலரும் பல வகையான உணவுகளை வீட்டில் இருந்து சமைப்பது பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு உணவுகளை வீட்டிலேயே தயாரித்து முயற்சி செய்தனர். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் பல உணவு செயல்முறைகள் பற்றிய தேடல் கூகுளில் அதிகம் காணப்பட்டுள்ளது.

உணவு பற்றிய தேடலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது எனோக்கி மஷ்ரூம் எனப்படும் ஒரு வகைக் காளான். காளானை தொடர்ந்து மோதகம் என்று கூறப்படும் கொழுக்கட்டை செய்வது எப்படி மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய குக்கீஸ் ஆகியவை கூகுள் சேர்ச்சில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.

கூகுள் செய்திகள் பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் அதிகமாக தேடப்பட்ட செய்தியாக வருவது கோவிட் மற்றும் கொரோனா சம்பந்தப்பட்ட உலகளாவிய அறிவிப்புகள் உள்ளன.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Google, YearEnder 2021