Home /News /technology /

சர்வதேச அளவில் இந்தியர்களின் தலைமையில் செயல்படும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள்!

சர்வதேச அளவில் இந்தியர்களின் தலைமையில் செயல்படும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள்!

பராக் அகர்வால்

பராக் அகர்வால்

மைக்ரோப்ளாகிங் தளமான டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஜாக் டார்சி நேற்று பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மும்பை ஐஐடியில் படித்த பராக் அகர்வால் டிவிட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    இந்தியர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளில் இயங்கி வரும் பல நிறுவனங்களில் இந்தியர்களின் பங்களிப்பு இருந்து வந்துள்ளது. மைக்ரோப்ளாகிங் தளமான டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஜாக் டார்சி நேற்று பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மும்பை ஐஐடியில் படித்த பராக் அகர்வால் டிவிட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.

    கடந்த சில மாதங்களாக டிவிட்டரின் செயல்பாடு பற்றி முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்து வந்த நிலையில், புதிய தலைமை அமைக்க வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையொட்டி, தீவிரமான ஆலோசனைகளுக்குப் பிறகு, பராக் அகர்வாலை அனைவரும் ஒரு மனதாகத் தேர்வு செய்ததாகவும் டோர்சி குறிப்பிட்டார். பல்வேறு சாதனைகளை உலக அளவில் செயல்படுத்தி வரும் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் செயலாற்றி வரும் நிலையில், அந்த பட்டியலில் பராக் அகர்வாலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    “இந்தியர்கள் தொழில்நுட்ப துறையில் வல்லுனர்களாக இருப்பதும், தொடர் வெற்றிகளைக் குவிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட், அடோப், ஐபிஎம், பாலோ அல்டோ நெட்வொர்க்ஸ், வரிசையில் இப்போது டிவிட்டரும் இந்தியர்களால் வழிநடத்தப்பட இருக்கிறது.” என்று உலகின் மூன்றாவது பெரிய யூனிகார்ன் நிறுவனமான ஸ்ட்ரைப்பின் தலைமை நிறுவனர் பாட்ரிக் கோலிசன் டிவீட் செய்துள்ளார். டெக்னாலஜி உலகத்தையே கலக்கி வரும் எலான் மாஸ்க், “இந்தியர்களின் திறமைகள் அமெரிக்காவுக்கு பல வகையில் பலன் அளிப்பதாக இருக்கிறது” அவருடைய டிவீட்டிற்கு பதில் டிவீட் செய்துள்ளார்.

    ALSO READ |  ''இதை செய்ய தாமதப்படுத்தினால் இந்தியா மோசமான விளைவை சந்திக்கலாம்'' : எச்சரிக்கும் கெஜ்ரிவால்

    டிவிட்டரின் புதிய CEO பராக் அகர்வால் :

    பராக் அகர்வால் இந்தியாவைச் சேர்ந்தவர். ஐஐடி மும்பையில் பிடெக் படிப்பை முடித்து, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் மென்-பொறியாளராக கடந்த 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். குறுகிய காலத்திலேயே நிறுவனத்தின் மிகச்சிறந்த மென்பொருள் பொறியாளர் என்ற இடத்துக்கு முன்னேறினார். பின்னர், 2017 ஆம் ஆண்டில் டிவிட்டர் நிறுவனம் இவரை தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) நியமித்தது. டிவிட்டரில் இணையும் முன்பு, அகர்வால் AT&T லாப்ஸ், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியர்கள் தலைமையில் இயங்கும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைவர்களின் பட்டியல் இங்கே.

    ALSO READ |  இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவவில்லை- மத்திய அமைச்சர் விளக்கம்

    கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை :

    உலகமே பயன்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் தலைவரான சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர் மற்றும் ஐஐடி மெட்ராசில் படித்தவர். 2004 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் டூல்பார், கூகுள் குரோம் ஆகியவற்றில் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் புதுப்பிகளையும் கொண்டுவந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, கூகுள் புராடக்ட் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் OS தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2015 ஆம் ஆண்டு, தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுளின் தலைவராக இந்தியாவில் பிறந்து வளர்ந்த கூகுள் நியமிக்கப்பட்டார். பின்னர், கூகுள் நிறுவனத்தின் பேரண்ட் நிறுவனமான Alphabet Inc க்கும் CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாடெல்லா :

    1992 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் சத்யா நாடெல்லா, 2014 ஆம் ஆண்டில் CEO ஆக நியமிக்க்கப்பட்டார். இவர் MIT இல் BE முடித்த பின்பு, ஸ்டான்ஃபோர்டில் MS படிப்பை மேற்கொண்டார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சிக்கு இவரின் திட்டங்கள் இன்றியமையாதது. சமீபத்தில், உலகின் மிகப்பெரிய கிளவுட் கட்டமைப்புகள் வடிவமைப்பில் சாதனை புரிந்துள்ளார்.

    ALSO READ |  பெண் எம்பிக்களுடனான செல்பி சர்ச்சையை தொடர்ந்து புது செல்பி வெளியிட்ட சசி தரூர்!

    ஐபிஎம் நிறுவனத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணா :

    90-களின் ஆரம்பத்தில் தன்னுடைய கேரியரை ஐபிஎம் நிறுவனத்தில் தொடங்கினார் அர்விந்த் கிருஷ்ணா. ஐபிஎம் நிறுவனத்தின் மிகப்பெரிய திட்டமான $34 பில்லியன் மதிப்புள்ள ரெட் ஹாட் நிறுவனத்தின் வாங்கும் செயல்பாடுகளில் அங்கமாக செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, நிறுவனத்தின் தலைவராக நியமிக்கபட்டார்.

    அடோப் நிறுவனத்தின் தலைவர் ஷாந்தனு நாராயண் :

    1998 ஆம் ஆண்டில் அடோப் நிறுவனத்தில் உலகளாவிய புராடக்ட் மேம்பாட்டு துறையில் சீனியர் துணை தலைவராக அடோப் நிறுவனத்தில் சேர்ந்தவர் ஷாந்தனு நாராயண். அடுத்த மூன்று ஆண்டுகளில் VP ஆக அதவி உயர்வு அளிக்கப்பட்டு, 2007 ஆம் ஆண்டு அடோப் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார்.

    ALSO READ |  எந்த ரத்த வகைகளை கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம்? ஆய்வில் தகவல்

    VMWare நிறுவனத் தலைவர் ரகு ரகுராமன் :

    VMWare நிறுவனத்தில் 2003 ஆம் ஆண்டு தனது பயணத்தைத் தொடங்கிய ரகுராமன், நிறுவனத்தின் மிகப்பெரிய தயாரிப்புகளான ESX மற்றும் vSphere ஆகியவற்றை நிர்வகித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், நிறுவனத்தின் CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், ஃபிளாஷ் மெமரி ஸ்டோரேஜ் சாதனமான சான்டிஸ்க் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்திய வம்சாவளிச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Google, Twitter

    அடுத்த செய்தி