• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Google Pixel 6 முதல் Asus 8Z வரை - விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள்!

Google Pixel 6 முதல் Asus 8Z வரை - விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள்!

கூகுள் பிக்சல் 6

கூகுள் பிக்சல் 6

விரைவில் லாஞ்ச்சாக உள்ள இந்த Motorola Edge S ஸ்மார்ட் ஃபோன் 12GB ரேம், 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
மொபைல் ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் புதிய ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்து வெளியிட்டு வருகின்றன. நாட்டில் தற்போது பண்டிகை கால சீசன் என்பதால் பல்வேறு ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை இந்திய மார்க்கெட்டில் வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் அடுத்து வரும் சில நாட்களில் முன்னணி ஸ்மார்ட் ஃபோன் பிராண்டுகளான சாம்சங், கூகுள், மோட்டோரோலா மற்றும் ஆசஸ் போன்றவை தங்கள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.

சாம்சங், கூகுள் மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட் ஃபோன் வெளியீடுகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் டிவைஸ்கள் அனைத்தும் உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது, சிறிது காலம் எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அறிமுகமாக இருக்கும் முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் ஃபோன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.,

மோட்டோரோலா எட்ஜ் எஸ் (Motorola Edge S):

விரைவில் லாஞ்ச்சாக உள்ள இந்த Motorola Edge S ஸ்மார்ட் ஃபோன் 12GB ரேம், 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவை பொறுத்த வரை இந்த ஸ்மார்ட் ஃபோனில்108MP பிரைமரி கேமரா கொண்ட டிரிபிள் கேமரா அம்சம் இருக்கிறது. இது 8 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 16 எம்பி கேமராவால் சூழப்பட்டுள்ளது. இதன் முன் பக்கத்தில் 25 எம்பி செல்ஃபி ஷூட்டர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 5,000mAh பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட இந்த மொபைல் வரும் அக்டோபர் 20ம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 6 & பிக்சல் 6 ப்ரோ (google Pixel 6 & Pixel 6 Pro):

கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் கூகுளின் இன்-ஹவுஸ் டென்சர் SoC மற்றும் டெலிஃபோட்டோ ஜூம் லென்ஸ் (4x) உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. அதே போல கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், தைவான், ஜப்பான், அமெரிக்கா மற்றும் யுனைட்டட் கிங்டம் உள்ளிட்ட 8 நாடுகளில் பிக்சல் 6 சீரிஸை முதலில் அறிமுகப்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதற்கான தகவல்கள் இதுவரை ஏதும் இல்லை.

Also read... விரைவில் அறிமுகமாகும் நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போன் - விலை, சிறப்பம்சங்கள் இதோ!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ (Samsung Galaxy S21 FE):

நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட் ஃபோனான Samsung Galaxy S21 FE, ஃபாஸ்ட் சார்ஜிங், 6.4 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மற்றும் 8GB ரேம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் வரும் 20-ம் தேதி Galaxy Unpacked 2021 Part 2 என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில், இதில் Galaxy S21 FE வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புகள் எழாமல் இல்லை. ஆனால் ஜனவரியில் தான் இந்த ஸ்மார்ட் ஃபோன் அறிமுகமாகும் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல்களும் உலா வருகின்றன.

ஆசஸ் 8Z (Asus 8Z):

Asus Zenfone 8 லாஞ்ச் செய்யப்பட்டு சுமார் 5 மாதங்களாகியும் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் வெகு விரைவில் இந்த ஸ்மார்ட் போன் Asus 8Z என்ற பெயரில் நாட்டில் அறிமுகமாகும் என தெரிகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. Asus 8Z ஸ்மார்ட் ஃபோன் 16GB ரேம், 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: