பேஸ்புக் தொடங்கி கூகுள் வரை...! ஜியோ ஈட்டிய முதலீடு விபரங்கள்

ஜியோ

Jio Deal | ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கூகுள் - ஜியோ ஒப்பந்த அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில், பேஸ்புக், சில்வர் லேக்,. விஸ்டா இக்யூட்டி, ஜெனரல் அட்லாண்டிக், முபடாலா, இண்டெல், குவால் காம் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

  இந்த வரிசையில், 14 ஆவதாக கூகுள் நிறுவனம் இணைந்துள்ளது. இன்று நடந்த ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

  ₹ 33.737 கோடி மதிப்பிலான 7.7 சதவிகித பங்குகளை கூகுள் நிறுவனம் வாங்க உள்ளது. இது ஜியோவில் இரண்டாவது பெரிய முதலீடு ஆகும்.
  படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

  படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
  கடந்த ஏப்ரல் 22-ல் பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவிகித பங்குகளை ₹ 43,547 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

  ஜியோ முதலீடு விபரம்


  நிகழ்ச்சியில் பேசிய கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோ நிறுவனத்துடன் இணைந்திருப்பது மிகவும் பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இணையதளம் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் எனவும், ஜியோ உடனான ஒப்பந்தத்தின் மூலம், லட்சக்கணக்கான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் சேவையை பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

  Published by:Sankar A
  First published: