Home /News /technology /

Google | கூகுள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ் ... ஏன் தெரியுமா? 

Google | கூகுள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ் ... ஏன் தெரியுமா? 

Google

Google

Google | Alphabet Inc-ன் கூகுள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் யூரோக்கள் ($2.2 மில்லியன்) அபராதம் பிரான்ஸ் வர்த்தக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஆப் ஸ்டோரில் டெவலப்பர்களிடம் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
உலகம் முழுவதும் மில்லியனுக்கும் அதிகமான யூஸர்களால் பயன்படுத்தும் தேடுபொறி தளமாக கூகுள் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு, பில்லியன் கணக்கான யூஸர்களுடன் செயல்பட்டு வரும் கூகுள் தளத்திற்கு பிரான்ஸ் அரசு 2 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

Alphabet Inc. இன் கூகுள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் யூரோக்கள் ($2.2 மில்லியன்) அபராதம் பிரான்ஸ் வர்த்தக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஆப் ஸ்டோரில் டெவலப்பர்களிடம் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று வெளியான தீர்ப்பின் படி, 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு முந்தைய ஒப்பந்தங்களின் படி கூகுள் ப்ளே ஸ்டோரியில் இணைந்துள்ள டெவலப்பர்களால் உருவாக்கப்படும் வருவாயில் இருந்து 30 சதவீத கமிஷன் உள்ளடக்கிய ஏழு உட்பிரிவுகளை கூகுள் நிறுவனம் மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப் டெவலப்பர்கள் தொடர்பான உரிமைகள் மற்றும் கடமைகளில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு, ஒப்பந்தங்களை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைக்கும் அல்லது நிறுத்துவதற்கு கூகுளுக்கு உள்ள உரிமை உட்பட்டவை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் மீது, 2018 ஆம் ஆண்டு பிரெஞ்சு நிதி அமைச்சகத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையிலேயே கூகுள் நிறுவனத்திற்கு 2.2 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிகப்பட்டுள்ளது.



 

இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் செய்திதொடர்பாளர் கூறுகையில், "சமீபத்தில் 99% டெவலப்பர்களுக்கு எங்கள் சேவைக் கட்டணத்தை 15% அல்லது அதற்கும் குறைவாகக் குறைப்பதன் மூலமாக டெவலப்பர்களுக்கு அதிக ஆதரவை வழங்கவும், நிலையான வணிகங்களை உருவாக்க அவர்களுக்கு உதவவும் விரும்புகிறோம். இந்த தீர்ப்பில் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம், அதை நெருக்கமாக மதிப்பாய்வு செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read : ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..

இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யுமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வராத நிலையில், ஆப்பிள் தொடர்பாக பிரான்ஸ் வணிக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : Apple, Google Chrome பயனர்களே உஷார்... மத்திய அரசு வெளியிட்ட திடீர் எச்சரிக்கை!

கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் அரசு அபராதம் விதிப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் நாடு 500 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது. கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்களான ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகியவை அளித்த புகாரின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைப் போட்டி விதிமுறைகளை கண்காணித்து வரும் அமைப்பு இந்த அபராதத்தை விதித்தது.
Published by:Selvi M
First published:

Tags: Google, Google play Store

அடுத்த செய்தி